tamilnadu

img

ஈரானுக்கு கூடுதல் பொருளாதார தடை அமெரிக்கா அடாவடி

வாஷிங்டன், ஜன.11- ஈரான் நாட்டிற்கு எதிராக கூடுதல் பொருளாதார தடைகளை அமெ ரிக்கா விதித்துள்ளது. ஈரான் ராணுவ தளபதி  காசிம் சுலை மானியை அமெரிக்கப் படைகள் ஏவு கணை மூலம் தாக்கி படுகொலை செய் தது. இதற்கு பதிலடியாக இராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனால் இருநாடுகள் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரான் மீது கூடுதல் பொருளாதார தடைகளை அமெ ரிக்கா விதித்துள்ளது. ஈரானின்,  உற் பத்தி, சுரங்கம், ஜவுளி துறைகள் மற் றும் அந்நாட்டு உயர் அதிகாரிகள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது.