அதிர்ச்சி தரும் தகவல்கள்
வாஷிங்டன், மார்ச் 24- பதற்றத்தின் பிடியில் உள்ள அமெரிக்காவையும், மக்களிடம் கொரோனா வைரஸ் பல மடங்கு வேகமாகப் பரவி வரும் நிலையில், இதை `அரசியல் புரளி’ என்று கூறி அலட்சியம் காட்டிய ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான வல்லாதிக்க நாடு இப்போது அந்த வைரஸ் தாக்குதலுக்கு ஒரு தீர்வு அளிக்க முடியாமல் திணறி வருவதையும் பார்ப்பது ஆச்சரியமாக உள்ளது. வெளியிலிருந்து பார்த்தால் இந்த நாடு பலருக்கும் ஒரு முழுமையான நாடாகத் தோன்றும். தங்களுடைய வருமானம் முழுவதையும் செலவிட்டு, வாழ்வை ஆபத்தான சூழ்நிலைகளுக்கு ஆட்படுத்திக் கொண்டு, ஆபத்தான வாழ்க்கைப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒரு சில நாட்களுக்குள் இந்த நாடு முற்றிலும் மாறிவிட்டது. இந்த வைரஸ் தாக்குதலால் 582 பேர் உயிரிழந்துள்ளனர். 46,168க்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்காவில் இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி யுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது இன்னும் எவ்வளவு மோசமாகப் போகும், எவ்வளவு நாட்களுக்குப் போகும் என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் உலகின் எந்த மூலையில் எந்த சம்பவம் நடந்தாலும், தனது தீர்ப்பை சொல்லத் தவறாத ஒரு நாடு, தங்களுடைய வல்லமை குறித்து வரம்புகளைத் தாண்டி பெருமையடித்துக் கொள்ளும் தலைவர்களைக் கொண்ட ஒரு நாடு, உலகின் வல்லாதிக்க நாடு எந்த அளவுக்கு அம்பலப்பட்டும், உள்நாட்டளவில் சிறுமைப்பட்டும் கிடக்கிறது என்பதைப் பலராலும் பார்க்க முடிகிறது. மோசமான ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், ``அமெரிக்க மக்கள் தொகையில் பாதி பேருக்கு கோவிட் - 19 தொற்று ஏற்படும், 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைவார்கள்’’ என்று அமெரிக்க மத்திய பொது சுகாதாரப் பாதுகாப்பு ஏஜென்சியான நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்களின் (சி.டி.சி.) முன்னாள் இயக்குநர் டாம் பிரியெ டென் கூறுகிறார். அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டவர் கள் தங்கள் நாடுகளுக்குச் சென்று கொண்டி ருக்கிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது.
``நியூயார்க் அல்லது லண்டனுக்கு பெரு மையுடன் தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைத்த சீன பெற்றோர்கள்கூட, மாஸ்க்குகள் மற்றும் கிருமிநாசினிகளை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் அல்லது 25,000 பவுண்ட் செலவு பிடித்தாலும் தங்கள் பிள்ளை களை வீட்டுக்கு வரச் செய்கின்றனர்’’ என்று ஒரு செய்தி கூறுகிறது. ``நியூயார்க்கில் இருப்பதைவிட, சீனா வுக்கு திரும்பிச் செல்வது பாதுகாப்பான தாக இருக்கும் என்று நினைத்ததால் நாங்கள் திரும்பி வந்தோம்’’ என்று இந்த மாதத்தில் கிழக்கு சீனாவில் உள்ள தனது நகரத்துக்குத் திரும்பிய 24 வயதான கல்லூரி பட்டதாரி மாணவர் சொன்னதாக செய்தியில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. கொரோனா பரவுதல் மற்றும் மரணங்கள் அதிகரித்த நிலையில் இரண்டு மாதங்க ளுக்கு முன்பு சீனா எத்தகைய போராட்டங்க ளை சமாளித்தது என்பதை நினைத்துப் பாருங்கள். பரிசோதனை மற்றும் அவசர கால திட்டங்களை உருவாக்காமல், வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் என்று டிரம்ப் நிர்வாகத்தின் மீது அப்போது குற்றச்சாட்டு எழுந்தது.
``நாங்கள் அதை முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம்’’ என்று ஜனவரி பிற் பகுதியில் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார அமைப்பு மாநாட்டின் போது சி.என்.பி.சி.க்கு அளித்த பேட்டியில் டிரம்ப் கூறினார். நிலைமை வேகமாக மாறியது. நாட்டின் நிலவரத்தைப் பார்ப்பதற்கே அதிர்ச்சியாக உள்ளது - அனைவருக்கும் ஆரோக்கிய வசதி என்பதில் அரசின் பங்களிப்பு அரசி யல் விளையாட்டாக மாறிவிட்ட நிலையில் - ஆலோசனைகளுக்குப் பல நாட்கள் எடுத்துக் கொண்டதால், கொரோனா பரிசோ தனை வசதிகளை அதிகரிக்கத் திணறி வருகிறது அமெரிக்கா. அமெரிக்காவின் மிக உயர்ந்த சுகாதார ஏஜென்சியான சி.டி.சி. தங்களுடைய கொரோ னா வைரஸ் வரிசோதனை நடைமுறையை உருவாக்கியுள்ளது. ஆனால் உற்பத்தியில் ஏற்பட்ட குறைபாடுகளால், ஆரம்பக்கட்ட பரிசோதனை முடிவுகள் முழுமை பெறாமல் உள்ளன.
பஞ்சு உருட்டு குச்சிகள், கையுறைகள், கொரோனா பரிசோதனைக்குத் தேவைப் படும் சாதனங்கள் மற்றும் இதர பொருட்கள் உற்பத்தி எதிர்பார்க்கப்பட்ட வேகத்தில் நடைபெறவில்லை என்று செய்திகள் தெரி விக்கின்றன. அரசின் ஆயத்த நிலைகள் பற்றி மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கியதும், தன்னைச் சுற்றி மருத்துவத் தொழில்துறையினரை வைத்துக் கொண்டு டி.வி. முன் டிரம்ப் தோன்றினார். தங்களுடைய பங்கை சிறப்பாக ஆற்றி, அளிப்பதாக அவர்கள் உறுதியளித்தனர்.
ஆனால் நிலைமை உடனடியாக துரித கதியை எட்டவில்லை. இந்த நிலையில்தான், ``அமெரிக்காவில் பெரிய அளவில் தொற்றுநோய் பரவும் நிலையில், தேவையான மருத்துவ ஆதரவுகளுக்கு தனியார் நிறுவனங்கள் மற்றும் நல்ல மனது கொண்ட கொடையா ளர்களின் தயவை நம்பியிருக்க வேண்டி யுள்ளதே என்பது கவலைக்குரிய, செயல்பா டற்ற நிலையைக் காட்டுவதாக இருக்கிறது’’ என்று பத்திரிகையாளர் டேவிட் வாலஸ்-வெல்ஸ் கடுமையாகக் குற்றஞ்சாட்டினார். ‘America is broken’ அமெரிக்கா நொறுங்கு கிறது என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டு ரையில் டிரம்ப் மற்றும் அரசு நடைமுறைகள் பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார். முற்றிலும் கார்ப்பரேட் மயமாக்கப்பட்ட சுகாதாரச் சூழலில், பரிசோதனை வசதிகள் கிடைத்தாலும், பலருக்கும் அதற்கான செலவை ஏற்க முடியாது - நீங்கள் காப்பீடு செய்திருக்காவிட்டால், விளிம்பில் வாழ்வ தாக அர்த்தமாகும் நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்க மொத்த மக்களும் விளிம்பில் நிற்கின்றனர்.
(பிபிசி)