tamilnadu

img

விவசாயக் கடன் வட்டி மானியம் ரத்து மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

விவசாய இடு பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும், விவசாயக் கடன் வட்டி மானியத்தை ரத்து செய்த மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மதுராந்தகம் வட்டக்குழுவின் சார்பில் படாளம் கூட்டுச் சாலையில் திங்களன்று (ஜன. 06) சங்கத்தின் வட்டச் செயலாளர் எஸ்.ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.மோகனன், மாவட்டச் செயலாளர் கே.நேரு,  வட்டப் பொருளாளர் தனசேகரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் கே.வாசுதேவன், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் வட்டச் செயலாளர் சசிக்குமார், வாலிபர் சங்கத்தின் ஒன்றிய பொருளாளர் தினேஷ் உள்ளிட்ட பலர் பேசினர்.