சென்னை,டிச.7- ஜி.எஸ்.டி. சட்டத்துக்கு ஒப்பு தல் அளித்ததால் தமிழக அரசின் கஜானா காலியாகும் நிலை உள்ள தாக திமுக தலைவர் மு.க.ஸ்டா லின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:- “ஜி.எஸ்.டி சட்டத்தைச் செயல் படுத்தியதால் மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகை குறித்த தனது வாக்குறுதியையும், சட்டத்தையும் மீறியுள்ள மத்திய பாஜக அரசின் மீது வழக்குத் தொடர்ந்தாவது தமிழகத்தின் நிதி தன்னாட்சி உரிமையை நிலைநாட்ட வேண்டும்” “தமிழகத்தின் நிதிநிலைமை மோசமாகிக் கொண்டிருக்கும் நிலையில், கஜானாவைக் காலி செய்து விட்டுப் போக வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், முத லமைச்சரும் துணை முதல மைச்சரும் செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுந்திருக்கிறது”.
ஜிஎஸ்டி சட்டத்தால் தமிழ் நாட்டிற்கு ஏற்படும் 9,270 கோடி ரூபாய் இழப்பீடு பற்றி அதிமுக அரசு சிறிதும் அக்கறை காட்ட வில்லை. தில்லி, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநி லங்களைச் சார்ந்த நிதியமைச் சர்கள் மற்றும் பிரதிநிதிகள், “ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் வரையிலான இழப்பீட்டுத் தொகையை விடுவிக்கக் கோரி யும்” மத்திய நிதியமைச்சரைச் சந்தித்து முறையிட்டுள்ளார்கள். அவர்களுடனும் தமிழக அரசின் நிதியமைச்சர் செல்லவில்லை. ஒருவேளை மத்திய பாஜக அரசு தங்கள் மீது கோபம் கொண்டால் என்ன செய்வது என்ற பயமோ என்னவோ! எதற்கெடுத்தாலும் வழக்கமாகக் கடிதம் மட்டும் எழுதும் முதலமைச்சர் பழனி சாமியும் இது குறித்து மவுன மாகவே இருக்கிறார்.
“ஆட்சியில் இருக்கப் போவது இதுவே கடைசி முறை. ஆகவே நாம் எதற்காக மாநில அரசின் நிதி உரிமைக்காக மத்திய அரசுடன் மோதி, கடனாகப் பெற்ற பதவிக்கு ஆபத்தைத் தேடிக் கொள்ள வேண் டும்” என்ற அச்சத்தில், மாநில நிதி தன்னாட்சி உரிமையை ஒட்டு மொத்தமாகக் கொடுத்து விட்டு அமர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக ஆட்சியின் மோச மான நிதி மேலாண்மையால், 3 லட்சத்து 97 ஆயிரத்து 496 கோடி ரூபாய்க் கடன் வலையில் சிக்கி, மூழ்கிக் கொண்டிருக்கும் தமிழ கத்தின் நிதி நிலைமையில், “ஜி.எஸ்.டி இழப்பீட்டையும்” சுமை யாக ஏற்றி வைத்து கஜானாவை காலி செய்து விட்டுப் போக வேண்டும் என்ற உள்நோக்கத்து டன், முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் செயல்படுகிறார் களோ என்ற சந்தேகம் எல்லோ ருக்கும் எழுந்திருக்கிறது. இதில் தொடர்ந்து எவ்வித நட வடிக்கையுமின்றி அமைதி காப்பது, மாநிலத்திற்கு மேலும் சில பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும் என்று எச்சரிக்க விரும்பு கிறேன். இவ்வாறு ஸ்டாலின் தெரி வித்திருக்கிறார்.