வேலூர், ஏப்.24-2 டன் ரேசன் அரிசி கடத்திச் சென்றவர்கள் வாகனம் பழுதானதால், தொடர்ந்து எடுத்து செல்ல முடியாமல், அரிசி மூட்டைகளை சாலையோரம் உள்ள முள் முதறியில் மறைத்து வைத்து விட்டு சென்றுவிட்டனர். இது குறித்து பொது மக்கள் வாலாஜா வட்டாட்சியருக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் வட்டாட்சியர் ரேஷன் அரிசி மூட்டைகளை கைப்பற்றி ராணிப் பேட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தார். மேலும், அரிசியை கடத்தியவர்களை தேடிவருகிறார்கள்.