tamilnadu

img

தாராபுரம் அருகே விவசாயி தற்கொலை

கடன் வசூல் நெருக்கடி கொடுத்த வங்கி அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்திடுக

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

திருப்பூர், ஜூலை 4- தாராபுரம் அருகே விவ சாயி தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், அவ ருக்கு கடன் வசூல் நெருக் கடி கொடுத்த வங்கி அதி காரிகள் மீது வழக்கு பதிவு செய்திடக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, தமிழ் நாடு விவசாயிகள் சங்கத் தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூ தனன், மாவட்டச் செயலாளர்  ஆர்.குமார், மாவட்டப் பொருளாளர் ஆர்.வெங்கட்ரா மன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மானூர் பாளையம் கிரா மம்,  குழந்தைபாளையத்தை சேர்ந்தவர் விவ சாயி ராஜாமணி (55). அவர் தாராபுரம் நகரில் உள்ள ஆக்சிஸ் வங்கியில் கடந்த 2012ல் நீண்ட கால விவசாய கடன் பெற்றிருந் தார். பெற்ற கடனை சரியாக செலுத்திய நிலையில், 2017ம் ஆண்டு 1.5 லட்சம் கடன் பெற்றுள்ளார். அவரது பூமியை மேம்ப டுத்தி விவசாய பணியில் ஈடுபட்டு வந்தார். மூன்று இடங்களில் போர்வெல் போட்டும் தண்ணீர் பற்றாக்குறை, தொடர்ச்சியான வறட்சி மற்றும் விவசாயத்தில் நஷ்டம் ஏற் பட்டதால் கடனை முழுமையாக செலுத்த இயலவில்லை. இருப்பினும் சிரமத்திற்கு மத்தியிலும் வங்கிக்கு தவணைகளை அவ்வப்போது செலுத்தி வந்துள்ளார். 

இந்நிலையில்,  கொரோனா காலத்தில் போதுமான வருமானம் இல்லாததால் அவ ரால் தொடர்ச்சியாக தவணையை செலுத்த இயலவில்லை. ஆனால்,  தவணை தொகை யையும், அபராத வட்டியுமாக உடனே செலுத்த வேண்டுமென ஆக்சிஸ் வங்கி அதிகாரிகள் தொடர்ந்து நெருக்கடி அளித்து வந்துள்ளனர். மத்திய அரசு, ரிசர்வ் வங்கி ஆகியவை இந்த  காலத்தில் வட்டி வசூலிப்பு மற்றும் தவணை வசூலிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று அறிவித்தி ருந்த நிலையில், கடந்த 2 வாரமாக வங்கிக் கிளை மேலாளர்  மற்றும் வசூல் பிரிவு ஊழியர்கள் அவரது தோட்டத்திற்குச் சென்று தொடர்ந்து மிரட்டியுள்ள னர். இழிவாககவும், தரக்கு றைவாகவும் பேசியுள்ளார் கள்.

அதோடு அவரது குடும்பத்தினரையும் மோசமான வார்த்தைகளால் பேசி அசிங் கப்படுத்தி உள்ளனர். இதனால் மனமு டைந்த விவசாயி இராஜாமணி சனியன்று காலை பூச்சி மாத்திரை சாப்பிட்டு தற் கொலைக்கு முயன்றுள்ளார். குடும்பத்தி னர் அவரை கோவையிலுள்ள  மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆகவே, விவசாயி இராஜாமணி தற் கொலைக்கு காரணமான  தாராபுரம் நகர ஆக்சிஸ் வங்கி கிளை மேலாளர் மற்றும் கடன் வசூல் அதிகாரிகள் ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியதின் பேரில் வழக்குப்பதிந்து கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும். இவர் வாங்கிய கடன் கள் அனைத்தையும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். அவரை இழந்து வாடும் அவ ரது குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசை யும், திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தையும் கேட்டுக் கொள்வதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.