tamilnadu

முடிதிருத்துவோர் குடும்பங்களுக்கு நிவாரணம்

இராஜபாளையம், மே13-  இராஜபாளையம் பகுதியில் முடி திருத்தும் கடைகள் ஏராளமாக உள்ளன ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 50 நாட்க ளுக்கு மேலாகி விட்ட நிலையில் அனைத்து கடைகளையும் திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது ஆனால் முடிதிருத்தும் கடைகளை திறப்பதற்கு அனுமதிக்க வில்லை. இதையடுத்து முடிதிருத்துவோர் சங்கத்தினர் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இராஜபாளையம் நகர் செயலா ளர் மாரியப்பன் தலைமையில் கடைகளை திறக்க அனுமதி கோரியும், தங்களது குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரியும் வட்டாட்சியரை சந்தித்து மனுக் கொடுத்தனர். முடி திருத்தும் கடைகளை திறப்பது குறித்து விருதுநகர் ஆட்சிய ரின் கவனத்திற்குக் கொள்வதாக அவர் உறுதியளித்தார். மேலும் வட்டாட்சியர் முடிதிருத்துவோர் குடும்பங்க ளுக்கு 10 கிலோ அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட் களை நிவாரணமாக வட்டாட்சியர் வழங்கினார்.  திருவில்லிபுத்தூர் திருவில்லிபுத்தூரில் 160-க்கும் மேற்பட்ட முடிதிருத்தும் கடைகள் உள்ளன. கடைகளை திறக்க அனுமதிகேட்டு திரு வில்லிபுத்தூர் வட்டாட்சியரை சங்க நிர்வாகிகள் சந்தனம், ராமர், சுப்பையா சந்தித்து மனு அளித்தனர். முடிதிருத்தும் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் செய லாளர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். அவர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டுமெனவும் அரசை வலியுறுத்தி யுள்ளார்.