tamilnadu

img

மின்வெட்டு இருக்காது: அமைச்சர் கூறுகிறார்

நாமக்கல்,செப்.14- நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதி களில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் கூட்டங்கள் நடைபெற்றன. கூட்டத்திற்குப் பின்னர் மின்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாது. தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வயர் மேன், கேங் மேன், உதவிப் பொறியாளர் உள்ளிட்ட 6 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு மின்வாரியத்தில் இருந்து விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.