tamilnadu

img

ஜனவரி 19 தியாகிகள் தினத்தன்று விச, வி.தொ.ச ஆர்ப்பாட்டம்

மக்கள் விரோத பா.ஜ.க. அரசை கண்டித்து 

சென்னை, ஜன. 11- ஜனவரி 19 தியாகிகள் தினத்தையொட்டி தொழிலாளர்கள் - விவசாயிகள் , விவசாயத் தொழிலாளர்கள் ஒற்றுமை தினமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது.  அதையொட்டி இந்த ஆண்டும் மூன்று அமைப்புகளும் இணைந்து, மத்திய பாஜக  அரசின் தொழிலாளர் விவசாய விரோதப் போக்  கிற்கு எதிராக கண்டனம் முழங்கிட மாவட்டங்க ளில் விச - விதொச இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பி.சண்  முகம், அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம் வெளியிட்டுள்ள கூட்ட றிக்கை வருமாறு. ஜனவரி 19 திருமெய்ஞானம் தியாகிகள் தினத்தன்று தொழிலாளர்கள் - விவசாயிகள் -  விவசாயத் தொழிலாளர்கள் இணைந்து பாஜக  அரசின் ஜனநாயக விரோத மக்கள் விரோத நட வடிக்கைகளுக்கு எதிராக கண்டன இயக்கங்கள்  நடத்திட வேண்டுமென மத்திய சங்கங்கள் அறை கூவல் விடுத்துள்ளன. அதை நிறைவேற்றிடும் வகையில், நாடு முழுவதும் தேசிய குடியுரிமைச் சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை யும் நிறைவேற்றுவதை மத்திய அரசு விலக்கிக் கொள்ள வேண்டும். விலைவாசி உயர்வை தடுக்க வேண்டும், அனைவருக்குமான பொது விநியோகம் மற்றும் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், அத்தியாவசிய பொருட்களின் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும்.

வேலைவாய்ப்பை உருவாக்கிடுக

எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்து ரைப்படி விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்  படியான விலை தீர்மானிக்க வேண்டும். ஏழை  விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்களுக் கான சமூகப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும். கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயத் தொழிலாளர்களுக்கான ஒருங்கி ணைந்த மத்திய சட்டம் இயற்ற வேண்டும்.குறைந்தபட்ச கூலியை மாதத்திற்கு ரூ.21,000 மாக நிர்ணயிக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை  உறுதித்திட்டத்தை முழுமையாக நிறைவேற்றிட  வேண்டும். நகர்ப்புற பகுதிக்கும் திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் தேவையான சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும்.என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி, வரும் ஜனவரி 19 அன்று மாவட்டங்க ளில் குறைந்தபட்சம் 1 இடத்தில் விவசாயிகள் -  விவசாயத்தொழிலாளர்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுமெனவும் சிஐடியு  அமைப்பினர் அகில  இந்திய மாநாட்டுப் பணி களில் இருப்பதால் தலைவர்களை மட்டும் நிகழ்வில் பங்கேற்க செய்து, போராட்டத்தை விச - விதொச இணைந்து முன்னெடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

 

;