tamilnadu

img

தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்

சென்னை,ஜன.21- தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான இடங்க ளில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது.  இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறி விப்பில், தமிழகம் புதுவையில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும் எனவும், திருச்சி, கோவை, மதுரை, சேலம்  உள்ளிட்ட மலைப்பாங்கான பகுதிகளில் அதிகாலை நேரங்களில் அதிக பனிமூட்டம் நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது. 22 மற்  றும் 23 ஆகிய தேதிகளில் தென் தமிழக கட லோரப் பகுதிகளில் லேசான மழைக்கு  வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம்  ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வும், காலை நேரங்களில் லேசான பனி மூட்டம் நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது.