tamilnadu

img

மேலும் 4 நாட்களுக்குப் பருவமழை தொடர வாய்ப்பு: வானிலை மையம்

 சென்னை,டிச.31- வடகிழக்கு பருவமழை மேலும் நான்கு நாட்களுக்குத் தொடர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன், “அடுத்த வரும் தினங்  களில் ஓரிரு இடங்களில் மழை தொடர வாய்ப்பு உள்ளதால் வடகிழக்குப் பருவமழை  தொடர வாய்ப்பு இருக்கிறது” என்றார்.  தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பாக 447 மி. மீட்டர் அளவுக்குப் பெய்யும்  நிலையில் இந்த ஆண்டு 454 மி. மீட்டர் பெய்துள்ளதாகவும் இது இயல்பைவிட 2 சதவீதம் அதிகம் என்றும் அவர் தெரி வித்தார். கடந்த ஆண்டு 24 சதவீதம் குறை வாகப் பெய்ததாகவும் கூறினார்.

ஆறு மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாகவும், 22 மாவட்டங்களில் இயல்பை  ஒட்டியும், 5 மாவட்டங்களில் இயல்பைவிடக் குறைவாகவும் மழை பெய்துள்ளதாகத் தெரி வித்த அவர், அதிகபட்சமாக நீலகிரி மாவட்  டத்தில் இயல்பைவிட 64 சதவீதம் அதிகமாக வும், குறைந்தபட்சமாக பெரம்பலூர் மாவட்  டத்தில் 28 சதவீதம் குறைவாகவும் மழை பெய்துள்ளதாகக் கூறினார். சென்னையில் இயல்பான மழை அளவு  759 மி. மீட்டர் என்ற நிலையில் இந்த ஆண்டு  13 சதவீதம் குறைவாக 633 மி. மீட்டர் மழை  பெய்துள்ளதாக அவர் தெரிவித்தார். தமிழகத்தில் ஜனவரி முதல் டிசம்பர் வரை  இயல்பான மழை அளவு 947 மி. மீட்டர் என்ற  நிலையில் இந்த ஆண்டு 907 மி. மீட்டர் மழை பெய்துள்ளதாகவும் இது இயல்பை விட 14 சதவீதம் குறைவு என்றும் அவர் கூறினார். இந்த ஆண்டு வங்கக் கடலில் 3 புயல்கள்,  அரபிக் கடலில் 5 புயல்கள் உட்பட 8 புயல்கள்  உருவானதாகவும், அரபிக்கடலில் தான் வலு வான புயல்கள் உருவானதாகவும் அவர் தெரிவித்தார்.

;