வியாழன், ஜனவரி 28, 2021

tamilnadu

img

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை,ஜூலை 23- தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் அடுத்த 24 மணிநேரத்துக்கு லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு ஆந்திரா மற்றும் வட  தமிழக கடலோர பகுதியில் வளி  மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி  நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி  நேரத்துக்கு தமிழகம் மற்றும்  புதுச்சேரியில் ஒரு சில இடங்க ளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழக கடற்கரை மாவட்டங்க ளில் மேற்கு, தென்மேற்கு திசை யில் இருந்து அவ்வப்போது 35  முதல் 45 கி.மீ வேகத்தில் வலு வான காற்று வீசக் கூடும் என்றும்  வானிலை மையம் எச்ச ரித்துள்ளது.

;