tamilnadu

img

ரூ. 15,000 நிவாரணம் கோரி மே 8-ல் போராட்டம்

ஆட்டோ சம்மேளனம் அறிவிப்பு

சென்னை, மே 2- ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு உள்ளது வருவதால் வேலை இழந்து பரிதவித்து வரும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ரூ. 15 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்த என்று தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் வி. குமார், மாநில பொதுச்செயலாளர் எம். சிவாஜி ஆகியோர் விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:

மனித குலத்தையே அச்சு றுத்தி வரும் கொரோனா எனும் கொடிய நோயால்  உலகத்தின் பலநாடுகளும், ஒட்டுமொத்த இந்தியாவும் முடங்கியுள்ளது. கொரோனாவை காரணம் காட்டி  அவசர கதியில் ஊரடங்கு அறி விக்கப்பட்டது. இந்த அறிவிப்  பில் அன்றாடம்  உழைப்பவர் கள், ஏழைகள் எப்படி வாழ்வார்  கள் என்பதை மத்திய மாநில  அரசுகள் கவனத்தில் மேற் கொள்ளாமல் எடுக்கப்பட்ட முடி வால் முறைசார தொழிலாளர்  கள், மோட்டார் தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள் கடு மையான நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள். குறிப்  பாக ஆட்டோ தொழிலாளர்க ளின் வாழ்க்கை மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறி யுள்ளது.

ஏற்கனவே 40 நாட்கள் கடந்து விட்ட நிலையில் மேலும் இரண்டு  வாரங்கள் ஊரடங்கை நீடித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. தினந்தோறும் ஆட்டோக்கள் சாலையில் ஓடும்போது தான் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்க்கையும் ஓடும். ஊரடங்  கள் அன்றாடம் கட்ட வேண்டிய  நாள் சீட்டு, வாரச்சீட்டு, மாதாந் திர சீட்டு கட்டமுடியவில்லை. ஆட்டோவிற்கு பைனான்ஸ் கட்டமுடியவில்லை. தொடர்ந்து  54 நாட்கள் நிறுத்தி வைத்துள்ள தால் ஆட்டோவை பராமரித்து மீண்டும் சாலையில் ஓட்டுவ தற்கு பல ஆயிரம் தேவை என்ற  நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.

மேலே சொன்னவற்றோடு அன்றாடம் மூன்று வேலை  சாப்பாட்டிற்கு வழியில்லாமல் குடும்பமே வறுமையில் தள்ளாடு கிறது. அரசிடம் கோரிக்கை வைத்தால் நலவாரியத்தில் உள்ளவர்களுக்கு இரண்டாயி ரம் நிவாரணமும், அரிசி, பருப்பு  வழங்கியுள்ளதாக தம்பட்டம் அடிக்கிறது.

6 லட்சம் பேர் ஈடுபட்டுள்ள  ஆட்டோ தொழிலில் நலவாரி யத்தில் உறுப்பினராக உள்ள ஆட்டோ தொழிலாளர்கள் சுமார் 40,000 பேர்தான். அதிலும் புதுபித்து வைத்திருப்பவர்கள் சுமார் 25,000 பேர்தன். ஆறு லட்சம் எங்கே. 25 ஆயிரம் எங்கே என்பதை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.

தொடர்ந்து தமிழக அரசக்கு சம்மேளனம் சார்பிலும், மாவட்ட சங்கங்கள் சார்பிலும் பல மனுக்கள் அனுப்பி விட்டோம். நலவாரியத்தில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு மட்டும் நிவாரணம் என்பதை மறுபரி சீலனை செய்து வட்டாரபோக்கு வரத்து அலுவலகங்கள் மூலம்  கணக்கெடுத்து ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள அனைவருக்கும் ரூபாய் 10,000 வழங்க வேண் டும் என நாங்கள் கொடுத்த மனுக்கள் மீது அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை.

மற்ற முறைசார தொழிலா ளர்களை கணக்கெடுப்பதை விட ஆட்டோ தொழிலாளர்களை கணக்கு எடுப்பது மிகவும் எளிது என்ற போதும் அரசு  தரப்பில் அதற்கான எந்த முயற்சி யும் எடுக்க வில்லை. மேலும்  ஆட்டோ தொழிலாளர்கள் கேட்பது கல்வி உதவித் தொகையோ, திருமண உதவித் தொகையோ, இயற்கை மற்றும் விபத்து நிவாரணத்தொகையோ கேட்கவில்லை. இவைகள் வழங்கத்தான் நலவாரிய நிதி பயன்படுத்த வேண்டும்.

இது பேரிடர் காலம் என்ப தால் அரசு நிதி ஒதுக்கி அனைத்து  ஆட்டோ தொழிலாளர்களுக்கும் நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய அரசு  நலவாரியத்தை காரணம் காட்டு வது ஆட்டோ தொழிலாளர்களை அவமதிக்கும் செயல் என்பதை சம்மேளனம் சுட்டிக்காட்டுகிறது.

“ஆட்டோ தொழிலாளர் களை வாழவிடு- வாழ்வதற்கு 15,000 ரூபாய் நிவாரணம் கொடு” என்ற முழக்கத்தை முன்  வைத்து வி.பி.சிந்தன் நினைவு நாளான மே 8 அன்று காலை போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

காலை 10 மணிக்கு துவங்கி  10.15 மணி  வரை தோழர்கள் வீடுகளில், அல்லது பொருத்த மான ஆட்டோ நிறுத்தங்களில் அல்லது மையப்படுத்தப்பட்ட இடத்தில் மாவட்ட தன்மைக் கேற்ப சமூக இடைவெளியை கடைப்பிடித்து  போராட்டம் நடத்த வேண்டும் என தமிழ் நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் வேண்டுகோள் விடுக்கிறது.

இப்போராட்டத்திற்கு ஆட்டோ தொழிலாளர்களும், பொதுமக்களும் பேராதரவு தரவேண்டும். இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.