ரஷ்யாவில் விமானம் அவசரமாக தரையிறங்கும் போது, ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் பலியாகினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்துமுர் மாஸ்கான் என்ற இடத்திற்கு சூப்பர் ஜெட் விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 73 பயணிகள், 5 விமான சிப்பந்திகள் என மொத்தம் 78 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக விமானநிலையத்துடன் தொடர்பு கொண்டு மீண்டும் தரையிறங்க முற்பட்டது.
விமானம் தரையிறங்கும் போது எதிர்பாராத விதமாக தீ பிடித்து எரிந்தது. விமானத்தில் பயணம் செய்தவர்களில் 37 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். எனினும் இந்த விபத்தில் 41 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் 11 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.