ஞாயிறு, பிப்ரவரி 28, 2021

tamilnadu

img

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியை நேரலை செய்த தூர்தர்ஷன்

மும்பை:
பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தொடக்க விழா மற்றும் விஜயதசமி நிகழ்ச்சிகள், அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் (டிடி)நேரலை செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பொதுவாக தனியார்அமைப்புகள், இயக்கங்களின் நிகழ்ச்சிகள் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாவதில்லை. குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், பிரதமர் என அரசுத் தரப்பு நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்படுவது வழக்கம். அப்படியிருந்தும், அண்மையில் சென்னை ஐஐடி-யில் பிரதமர் மோடி பங்கேற்றபட்டமளிப்பு விழா நிகழ்ச்சியை சென்னை தூர்தர்ஷன் ஒளிபரப்பு செய்யவில்லை என்று, சம்பந்தப்பட்ட அதிகாரி நடவடிக்கைக்கு உள்ளானார்.ஆனால், ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் தொடக்க நாள்,விஜயதசமி நிகழ்ச்சிகள் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரிலுள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்ற நிலையில், இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பியது மட்டுமன்றி, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின்தோற்றம் குறித்த சிலைடுகளையும் கூடுதல் விவரங்களாக தூர்தர்ஷன் ஒளிபரப்பி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் விஜயதசமி நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் கட்காரி, வி.கே. சிங் ஆகியோரும், கார்ப்பரேட் முதலாளிகளில் ஒருவரான எச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

;