தோழர் சித்தப் பிரசாத் மேற்குவங்க மாநிலத்திலுள்ள 24 பர்கானா வடக்கு மாவட்டத்தில் 1915ல் பிறந்தவர்.1930லிருந்தே தமது இளம் வயதில் இவரது ஓவியப் பணி துவங்கியது. இவர் நிலப்பிரபுத்துவ காலனியாதிக்கத்துக்கு எதிராக தமது ஓவியங்களைத் தீட்டினார். இடதுசாரிக் கருத்துக்களை தமது ஓவியங்களில் வடித்த வித்தகர் இவர்.
பிரிட்டிஷ் ஆட்சியில் 1943 ல் ஏற்பட்ட வங்கப் பஞ்சத்தின் கொடுமைகளை, பாதிப்புகளை தமது ஓவியங்கள் மற்றும் கார்ட்டூன்களில் படம் பிடித்துக் காட்டினார். அதனால் சினம்கொண்ட ஆளும் வர்க்கம் இவரது பெரும்பாலான படைப்புக்களை அழித்தது. ஆனாலும் அவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ‘மக்கள் யுத்தம்’ எனும் இதழில் பிரசுரிக்கப்பட்டன.தமது இறுதிக் காலத்தில் குழந்தைகள் நலனுக்காகவும் உலக அமைதிக்காகவும் தமது கலையை சித்தப் பிரசாத் அர்ப்பணித்தார். 1978ஆம் ஆண்டு நவம்பர் 13ல் சித்தப் பிரசாத்தின் சித்திரங்கள் தமது பயணத்தை முடித்துக் கொண்டன.
===பெரணமல்லூர் சேகரன்===