வெள்ளி, மார்ச் 5, 2021

tamilnadu

img

வலைப்பதிவு : மிராஜ் 2000 போர் விமானங்கள் வந்த பொழுது தூர்தர்ஷன் கூடஇப்படி செய்தி வெளியிட்டது இல்லை

பத்திரிக்கைச் செய்திகளின்படி நிதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில்  ஜிஎஸ்டி இழப்பு தொகையை மாநிலங்களுக்கு தர இயலாது எனவும் வருமானம் பகிர்வு விகிதாச்சாரம் மாற்றப்பட வேண்டும் எனவும் மத்திய அரசாங்கம் கூறியுள்ளது. கூட்டாட்சிக் கோட்பாடுக்கு இது மிகப்பெரிய துரோகம். வாக்குறுதி அளித்தபடி ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தை உடனே கூட்டுக!\

- டாக்டர் தாமஸ் ஐசக், கேரள நிதியமைச்சர்

==========

காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் சைஃபுதீன் சோஸ் வீட்டுகாவலில் அல்லது சிறையில் இல்லை என ஜம்மு-காஷ்மீர் அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் கூறியது. ஆனால் அவர்வீட்டை விட்டு வெளியே வர காவல்துறையினர் அனுமதி மறுப்பு. இதன்பொருள் என்ன?

-நிதி ரஸ்தான், என்டிடிவி செய்தியாளர்

==========

விகாஸ் துபே என்கவுண்ட்டர் கொலை தொடர்பான விசாரணைக் குழுவில் உள்ள நீதிபதி பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரின் சம்பந்தி. அவரது சகோதரர்பா.ஜ.க. மேலவை உறுப்பினர். இன்னொரு உறுப்பினர் டி.ஜி.பி. குப்தா 200 என்கவுண்ட்டர் செய்தவர். எனினும் இவர்களை மாற்ற வேண்டியஅவசியம் இல்லை எனக் கூறுகிறது உச்சநீதிமன்றம். விசாரணைஎப்படி விளங்கும்? உண்மை எப்படிதெரியவரும்?

-பிரசாந்த் பூஷண்,  மூத்த வழக்கறிஞர்

======

ரஃபேல் விமானங்கள் இந்தியாவந்தடைந்ததை காட்சி ஊடகங்கள் மிகப்பெரிய பிரச்சாரமாக  வெளியிட்டுள்ளன. ஏதோ இதற்கு முன்பு போர் விமானங்கள் வாங்கப்படவே இல்லை என்பது போல சித்தரிக்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு மிராஜ் 2000 போர் விமானங்கள் வந்த பொழுது தூர்தர்ஷன் கூடஇப்படி செய்தி வெளியிட்டது இல்லை.  போர் விமானங்களும் ஆயுதங்களும் எல்லா தேசங்களும் வழக்கமாக வாங்குவதுதான்! ஏன் இந்த அலப்பறை?

-எம்.கே.வேணு பத்திரிக்கையாளர்

திருக்குறளைப் பற்றி மோடி பேசியதால் தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை - எடப்பாடி பழனிசாமி.சுற்றுச்சூழல் வரைவு அறிக்கையை தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் வெளியிடவில்லை. எதைப்பற்றியும் பேசுங்க முதல்வரே!

-டிஒய்எப்ஐ தமிழ்நாடு

========

தேசிய கல்விக்கொள்கையை இறுதிசெய்வதற்கு முன்பு பாஜக ஆளும் மாநிலங்களின் கல்வித்துறை அமைச்சர்களுக்கும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுக்கும் இடையே விரிவான ஆலோச னை நடந்துள்ளது. இந்திய கல்விக்
கொள்கையில் ஆர்எஸ்எஸ் தலையீடு பேராபத்து.

- முகமது சலீம், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு

$$$$$$$$$$$$

தொகுப்பு.... அன்வர் உசேன் 

;