tamilnadu

img

உடல்நலம் சரியில்லை என்று ஜாமீன் வாங்கிவிட்டு தேர்தலில் போட்டி நீதிமன்றத்தை ஏமாற்றிய பிரக்யா சிங் தாக்குர்

போபால், ஏப். 20 -மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில், முக்கியக் குற்றவாளியாக இருக்கும் பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்குர், உடல்நலத்தைக் காரணம் காட்டி ஜாமீன் பெற்றுவிட்டு, தற்போது தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பிரக்யா சிங் தாக்குர், தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும்; தேர்தலில் போட்டியிடும் அளவிற்கு உடல் நலத்துடன் இருப்பவ ரால், சிறையிலும் இருக்க முடியும் என்பதால் பிரக்யா சிங் தாக்கூரின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் கடந்த 2008-ஆம் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. அப்போது ரம்ஜான் தொழுகையை முடித்துவிட்டு வெளியே வந்த 7 பேர் உயிரிழந்தனர். தீவிர விசாரணைக்குப்பின், இந்த குண்டுவெடிப்புச் சதியில் இந்து அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதுகண்டுபிடிக்கப்பட்டு, பெண் சாமி யாரிணி பிரக்யா தாக்குர் உட்பட 14 பேரை, மும்பை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். இவர்கள் மீது 2009-இல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதுடன், 2011-இல் இவ்வழக்கு என்ஐஏ வசமும் ஒப்படைக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து, மும்பையில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் சுமார் 7 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த வழக்கில், ஷியாம் சாஹூ, ஷிவ்நாராயண் கல்சங்ரா மற்றும்பிரவீன் தகல்கி ஆகியோர் விடு விக்கப்பட்டனர்.


ஆனால், பிரக்யா சிங், ஸ்ரீகாந்த் புரோஹித், சுதாகர் திவேதி,ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ்உபாத்யா, சமீர் குல்கர்னி, சுதாகர் சதுர்வேதி, அஜய் ரஹிர்கர் ஆகியோருக்கு எதிராக தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. ஜகதிஷ் மாத்ரே, ராகேஷ் டாவ்டே ஆகியோர் மீது ஆயுதத் தடைச் சட்டத்தின்கீழும் குற்றம்சாட்டு பதிவு செய்யப்பட்டது.ஆனால், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபின், 2017-ஆம் ஆண்டு, பிரக்யா சிங் தாக்கூருக்கு ஜாமீன் கிடைத்தது. உடல்நலமின்மையைக் காரணம் காட்டி, பிரக்யா சிங் ஜாமீனில் வெளியேவந்தார். அண்மையில் அதிகாரப்பூர்வ மாக பாஜக-வில் இணைந்த பிரக்யா சிங் தாக்குர், தற்போது மத்தியப் பிரதேச மாநிலம் போபால் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராகவும் களம் இறங்க உள்ளார்.இதுதான் தற்போது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரக்யா சிங் தாக்குர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்குமாறு தேர்தல் ஆணையத்திலும், என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்திலும் நிசார் சயீது என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். இவர், மாலேகான் குண்டு வெடிப்பில் உயிரிழந்த நபர் ஒருவரின் தந்தை ஆவார். “பிரக்யா சிங் தாக்குர் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு உடல் தகுதியுடன் இருக்கிறார் என்றால், முன்பு உடல்நலமில்லை என்று அவர் நீதி மன்றத்தை தவறாக வழி நடத்தியது தெளிவாகி விட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.எஸ். படல்கர், இதுதொடர் பாக பதிலளிக்குமாறு ஐஎன்ஏஅமைப்புக்கும், பிரக்யா சிங் தாக்கூ ருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். பிரக்யா சிங் தாக்குர், போபால் மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 23-ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ய திட்டமிட்டிருக்கும் நிலையில், அதற்கு முதல்நாளான திங்கட்கிழமையன்று (ஏப். 22) இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

;