tamilnadu

img

எழுத்தாளர் ‘முகம்’ மாமணி காலமானார்

சென்னை, பிப். 24- எழுத்தாளர், பதிப்பாளர் மா.மணி (எ) முகம் மாமணி (91) சென்னையில் வியாழனன்று (பிப். 24) காலமானார். 1931ஆம் ஆண்டு பிறந்த இவர் குடும்ப வறுமையின் காரணமாக 3ஆம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. இதனால் இவர் 8 வயது முதலே பீடி சுற்றுதல், சுருட்டு செய்தல், தையல், கருமான், மளிகைக்கடை, எண்ணெய்க் கிடங்கில் பாரம் சுமத்தல் . எல்.ஐ.சி.யில் கடைநிலை ஊழியர் முதலிய வேலைகளைச் செய்துகொண்டே மாலை நேரங்களில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு, பியூசி, பி.காம், பிஜிஎல் வரை படித்து பட்டங்கள் பெற்றார். சிறு வயது முதலே படிப்பார்வம், எழுத்தார்வம், பேச்சார்வம் இருந்ததால் தன்னுடைய 17 வயதில் இருந்தே மேடைகளில் பேசியும், சிறுகதை, கட்டுரை, நாவல், கவிதை, நாடகம், வரலாறு எனப் பல்வேறு இதழ்களில் எழுதி வந்தார். இவருடைய படைப்புகள் 18 நூல்களாக வெளிவந்துள்ளன. 1953இல் தந்தை பெரியாரிடம் விடுதலை நாளிதழில் அச்சுக்கோக்கும் தொழிலாளியாக பணி யாற்றினார். 1956 முதல் 1991 வரை 36 ஆண்டுகள் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.

1982இல் சென்னை கலைஞர் கருணா நிதி நகரில் இலக்கிய வட்டம் என்னும் அமைப் பைத் தோற்றுவித்து மாதந்தோறும் முதல் ஞாயிறு களில் அறிஞர் பெருமக்களை கொண்டு இலக்கியச் சொற்பொழிவுகள் நடத்தி வந்தார். இதில் தமிழ கத்தின் மிகச்சிறந்த பெருமக்கள் உரையாற் றியுள்ளனர். 1983ஆம் ஆண்டு முதல் முகம் என்னும் இலக்கிய மாத இதழைத் தொடங்கி நடத்தி வந்தார். அந்த இதழின் முகப்பு அட்டையில் பல்வேறு சாதனையாளர்களை வெளியிட்டு அவர்கள் குறித்த வாழ்க்கைக் குறிப்புகளையும் வெளியிட்டார். முகப் போவியங்களாக இவ்வாறு வெளியிடப்பட்ட சாத னையாளர்கள் வரலாற்றை 4 நூல்களாக வெளியிட் டுள்ளார். பேரெழுத்தாளர் பன்மொழிப் புலவர் நாரண.துரைக்கண்ணன், கா.அப்பாத்துரையார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகி யோரின் வரலாற்றை அவர்களுடன் நேரில் பழகி எழுதி தொடர்ந்து முகம் இதழிலும் வெளியிட்டார். பின்பு அவை நூல்களாகவும் வெளிவந்துள்ளன. முகம் இதழில் கிந்தனார் பதில்கள் எனும் பெயரில்  மாமணி எழுதிய சிந்தனைக் களஞ்சியம் பலராலும் பாராட்டப்பட்டது. மாமணி 1956ஆண்டு ராதா அம்மையாரைத் தமிழ் திருமணம் செய்துகொண்ட அவர், தம் பிள்ளைகளுக்கும் அவ்விதமே தமிழ் முறையில் திருமணங்களை செய்து வைத்தார். அவரது தமிழ்ப் பணிக்காக இதுவரை 11 விருதுகளும், பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன. தமிழ் அமைப்புகள் இவரது மணி விழாவை ஏற்று நடத்தின. அந்த விழாவில் மாமணியைப் பற்றி பேசிய அறிஞர்க ளின் பேச்சுக்கள் அடங்கிய குறிப்புகள் அனைத் தும் மணிவிழா மாமணி என்ற பெயரில் புத்தக மாக வெளிவந்துள்ளது. 16.11.1999 அன்று கலை வாணர் அரங்கில் நடைபெற்ற கி.ஆ.பெ.விசுவநாதம் நூற்றாண்டு விழாவில், மாமணியின் இலக்கியப் பணியைப் பாராட்டி தமிழக முதல்வர் கருணாநிதி பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 9.6.2009 அன்று முகம் மாமணி எனும் மாமனிதர் என்னும்  வரலாற்றுத் தொகுப்பு நூலை (70 அறிஞர்கள், 33 ஏடுகள் பாராட்டியவை) குமரி முனை திருவள்ளு வர் சிலையை வடித்த தலைமைச் சிற்பி கணபதி ஸ்தபதி வெளியிட்டுப் பாராட்டியது குறிப்பி டத்தக்கது. 2006ல் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி,

கோரிக்கை மனுவை அண்ணா அறி வாலயத்தில் வழக்கறிஞர் ‘சிகரம்’ ச.செந்தில் நாதனுடன் இணைந்து முகம் மாமணி அன்றைய முதலமைச்சர் கருணாநிதியிடம் வழங்கினார். தனது இறப்புக்குப் பிறகும் முகம் இதழ் தொடர்ந்து வெளிவர வேண்டும் என அறக்கட்டளை அமைத்து இளமாறன் என்ற பொறுப்பாளரை நியமித்தார். தனது குழந்தைப் பருவம் தொடங்கி 91 வயது வரை அன்னைத் தமிழை அரியணை ஏற்ற அயராது உழைத்த மாமனிதர் ‘முகம்’ மாமணி வயது முதிர்வு காரணமாக வியாழனன்று கால மானார். சென்னை கே.கே.நகரில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, பழ.நெடுமாறன், பெ.மணியரசன், பொது பள்ளிகளுக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமுஎகச மாநிலத் தலைவர்கள் சிகரம் சி.செந்தில்நாதன், இரா.தெ.முத்து, சைதை ஜெ, பகத்சிங் கண்ணன், பாரி கபிலன், மணிநாத், ஹேமாவதி உள்ளிட்ட ஏராளமானோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் நெசப்பாக்கத்தில் உள்ள சுடுகாட்டில் வியாழனன்று மாலை எரியூட்டப் பட்டது.

;