tamilnadu

img

பார்வை மாற்றுத்திறனாளி மகாராஜா அமெரிக்காவில் பயிற்சி பெற ரூ.1.2 லட்சம்

தூத்துக்குடி, ஜூலை 19- உலக கிரிக்கெட் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற இந்திய  அணியின் அங்கமான தூத்துக்குடி யைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திற னாளி மகாராஜா அமெரிக்காவில் பயிற்சி பெற ஒரு லட்சத்து 20 ஆயிரம்  ரூபாயை தமிழக விளையாட்டு மற்றும்  இளைஞர் நலத்துறை அமைச்சர் உதய  நிதி ஸ்டாலின் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்  வென்றான் அருகே உள்ள லெட்சுமி புரத்தை சேர்ந்தவர் மகாராஜா (25).  பட்டதாரியும் பார்வை மாற்றுத்திறனா ளியுமான இவர் 2017 முதல் தமிழ்நாடு பார்வை மாற்றுத் திறனாளி கிரிக்கெட் அணியில் விளையாடினார். 2023 இல் இந்திய பார்வை மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியில் விளையாடும் வாய்ப்பு பெற்றார். கடந்த ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தில் நடந்த சர்வதேச போட்டியில் இவர் இடம்பெற்ற இந்திய  அணி வெள்ளிப்பதக்கம் பெற்றது. இவ ருடன் விளையாடிய ஒடிசா வீரர்களுக்கு  மாநில அரசு தலா 15 லட்சம் வழங்கி ஊக்கப்படுத்தியது. இதுகுறித்த விரிவான  செய்தி தீக்கதிரில் ஏற்கனவே வெளி யானது.    இந்நிலையில், மகாராஜா  இடம்பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு அமெரிக்காவில் பயிற்சி  அளிக்கப்பட உள்ளது. இதற்காக இம்மாதம் 24 ஆம் தேதி பெங்களூரு வில் இருந்து புறப்பட உள்ளார். அதற் கான நிதி உதவி கோரி தமிழக விளை யாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். அதன்படி ஜூலை 18 வியாழனன்று சென்னையில் தாயார் சண்முகத்தாயுடன்  அமைச்சரை சந்தித்து வாழ்த்துடன் நிதி  உதவியும் பெற்றார். இதுகுறித்த படத்துடன் தனது எக்ஸ் தளத்தில் அமைச்சர் உதயநிதி  கூறியிருப்பதாவது: பார்வை மாற்றுத்திற னாளிகளுக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்று வெள்ளி பதக்கம் வென்றுள்ள தம்பி மகாராஜாவை குறிஞ்சி இல்லத்தில் இன்று சந்தித்து வாழ்த்தினோம். கிரிக்கெட் போட்டி யில் தம்பி மகாராஜா தனது திறமையை  மென்மேலும் வளர்த்துக் கொள்ளும் விதமாக அமெரிக்காவில் உயர்தர பயிற்சியை பெற தேர்வாகியுள்ளார். அந்த பயிற்சியை பெறுவதற்கு துணை  நிற்கும் விதமாக அவருக்கு ரூ.1.20 லட்சத்திற்கான காசோலையை தமிழ் நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையி லிருந்து இன்று வழங்கினோம். தம்பி  மகாராஜா, பார்வை மாற்றுத்திறனாளி களுக்கான கிரிக்கெட் போட்டியில், தொடர்ந்து இந்திய அணிக்காக களம்  கண்டு வெற்றி வாகை சூடிட என் அன்பும்,  வாழ்த்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.