tamilnadu

புட்டுத் தோப்பு மைதானம் வழியாக நான்கு வழிச் சாலை அமைக்க எதிர்ப்பு... ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் மறியல்

மதுரை:
மதுரை ஆரப்பாளையம் மற்றும் கிராஸ் ரோடு பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக தற்போதுஇருவழி சாலை என்பது நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்தால் வைகை ஆற்றை ஒட்டிய பகுதியில் போடப்பட்டு வருகிறது. இதில் திண்டுக்கல் ரோடு காமராஜர் பாலம்பகுதியில் இருந்து ஆரப்பாளையம் கிராஸ் ரோடு வரை 70 சதவீத பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் அண்ணாதோப்பு, புட்டுத்தோப்பு சாலை இணைப்பு பகுதியில் தனியார் பள்ளி ஆக்கிரமிப்பு உள்ளதால் அப்பள்ளி பகுதிக்கு பின்புறம் சாலை போடப்படாமல் அனுப்பானடி கால்வாய் பகுதியை ஒட்டிய அண்ணா தோப்பு குடியிருப்பு பகுதிவழியாக சாலை அமைப்பதற்கான பணிகளை நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. 

இந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகளை மக்கள் தொடர்பு கொண்டு பேசியபோது, எங்களுக்கும் இதுக்கும்சம்பந்தம் இல்லை. இது நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்தின் கீழ் வருகிறது. எனவே நீங்கள் பொதுப்பணித்துறைநிர்வாகத்திடம் முறையிட வேண்டும் என்று கூறிவிட்டார்கள். இந்தநிலையில் திங்களன்று காலை அப்பகுதிபொதுமக்கள் இந்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராஸ் ரோடு சந்திப்பு அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
தற்போது நெடுஞ்சாலைத்துறை, சாலை போடுவதற்கு உத்தேசித்துள்ள இடம் புட்டுதோப்பு மைதானம் வழியாக செல்வதால் போக்குவரத்து நெரிசலும், மங்கையர்க்கரசி பள்ளி, வெள்ளி வீதி யார் பள்ளி, கேப்ரன்ஹால்பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு விபத்துக்களும் நேரிடும். அது போல புட்டுத்தோப்பு சிவபெருமான் கோவிலில் புட்டுக்கு மண் சுமக்கும் திருவிழா இந்த பகுதியில் காலம் காலமாக நடைபெற்று வருகின்றது. சுமார் 70 ஆண்டு காலமாக ஓர்ஷாப் தொழில், மற்றும் பெண்கள் குடிசைத் தொழில் செய்து வருகிறார்கள். இந்த நான்கு வழிச் சாலை தேசிய நெடுஞ்சாலைக்கு உட்பட்டது அல்ல.இதனால் பல்வேறு குடும்பங்கள் பாதிக்கப்படும். 

புட்டுத் திருவிழா அழிந்திடும்
இங்கு நான்கு வழிசாலை அமைப்பதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதுடன் பாரம்பரிய சிவபெருமான் புட்டுக்கு மண் சுமந்த திருவிழா அழிந்துவிடும் என்றனர். மறியலில் புட்டுதோப்பு பகுதி பொது மக்கள் மற்றும்அப்பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், புட்டுத் தோப்பு கோயில் பக்தர்கள், ஓர்ஷாப் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;