tamilnadu

img

காவல்துறை உதவி ஆணையர்கள் இடமாற்றம்

சென்னை, மார்ச் 26-  தமிழ்நாடு காவல்துறையில் 10 உதவி ஆணையர்கள்  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறை தலைமை இயக்குநர்  சைலேந்திரபாபு பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு:-  சென்னை பரங்கிமலை ஆயுதப் படை உதவி ஆணையர் எஸ்.ராம சாமி அம்பத்தூர் போக்குவரத்து பிரிவு உதவி ஆணையராகவும், பூக்கடை போக்குவரத்து பிரிவு உதவி உதவி ஆணையர் எஸ்.சம்பத் பாலன் அண்ணாநகர் போக்குவரத்து பிரிவு உதவி ஆணையராகவும், பரங்கிமலை ஆயுதப்படை உதவி ஆணையர் கே.சர வணன் கடலூர் மாவட்ட ஆயுதப் படை துணை காவல்கண்காணிப் பாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்ட ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர் டி.சவுந்தரராஜன் பரங்கிமலை ஆயுதப்படை உதவி ஆணையராகவும், புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர் எஸ்.முருகராஜ் சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை உதவி ஆணையராகவும், அப்பதவி யில் இருந்த எம்.சீனிவாசன் வண்ணார ப்பேட்டை போக்குவரத்து பிரிவு உதவி ஆணையராகவும் பொறுப் பேற்க உள்ளனர். சென்னை அண்ணா நகர் போக்குவரத்து பிரிவு உதவி  ஆணையர் ஏ.கணேஷ்குமார் திரு வள்ளூர் காவல் பயிற்சி பள்ளியின் துணை முதல்வராகவும், ஆவடியில் உள்ள தமிழ்நாடு காவல் பட்டாலியன் பிரிவு உதவி கமாண்டன்ட் எம்.சீனிவாசன் பரங்கிமலை ஆயுதப்படை உதவி ஆணையராகவும், வீராபுரம் தமிழ்நாடு காவல்படைப்பிரிவு உதவி கமாண்டன்ட் எம்.புருஷோத்தமன் பூக்கடை போக்குவரத்து பிரிவு உதவி ஆணையராகவும், மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.