மதுரை:
மோடி தலைமையிலான பா.ஜ.க.அரசு புதிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், தொழிலாளர் நலச் சட்டதிருத்தங்களை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டமைப்புகள் சார்பில் மதுரையில் தலைமை தபால் நிலையம் முன்புசனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சி.கருணாநிதி (எல்பிஎப்), மா.கணேசன், ஆர்.தெய்வராஜ், இரா.லெனின், வி.அழகுமலை, சி..சுப்பையா, பா.பழனியம்மாள், எஸ்.சந்தியாகு, மா.பாலசுப்பிரமணியம்,, மோகன் (சிஐடியு), டி.ராஜசேகரன் (ஐஎன்டியுசி), வி.பாதர்வெள்ளை (எச்.எம்.எஸ்), எஸ்.மகபூப்ஜான் (எம்எல்எப்), எஸ்.முருகேசன் (டிடிஎஸ்எப்),சிக்கந்தர் (எஸ்டியு), சங்கையா (ஏஏஎல்எல்எப்), மீன் பாண்டி (டியுசிசி), குகானந்தன் (ஏஐசிசிடியு) எம்.நந்தாசிங் (ஏஐடியுசி) உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.