tamilnadu

img

மதுரையில் நாளை முதல் ஊரடங்கு...

மதுரை 
கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் தினமும் தனது பரவல் வேகத்தை அதிகரித்து தமிழகத்தில் அதிக சேதாரத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தலைநகர் மண்டலமான சென்னை கொரோனாவால் உருக்குலைந்த நிலையில், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வரும் 30-ஆம் தேதி நிறைவு பெறுகிறது. 

இந்நிலையில், தமிழகத்தின் 2-வது பெரிய நகரான மதுரையிலும் கொரோனா பரவல் தாக்கம் கடந்த ஒருவாரமாக அதிகரித்து வரும் நிலையில், அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்த போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில்,"மதுரை மாநகராட்சி, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, பரவை பேரூராட்சி, திருப்பரங்குன்றம் வட்டம் ஆகிய பகுதிகளில் நாளை நள்ளிரவு முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். தேநீர் கடை, டாக்ஸி, ஆட்டோ ஆகியவை இயங்க அனுமதியில்லை.

காய்கறி கடைகள், பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும். அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் வீட்டில் இருந்து 1 கிமீ சுற்றளவில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசு அலுவலங்கள் 33% ஊழியர்களுடன் இயங்க அனுமதி உண்டு. ரேஷன் கடைகளில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை பொருட்கள் வாங்கலம். வரும் 28-ஆம் தேதி மதுரையில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்" எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.