tamilnadu

img

திருவாரூர் புத்தகத் திருவிழா நிறைவு: ஆண்டுதோறும் நடத்த கோரிக்கை

திருவாரூர், ஏப்.3-  திருவாரூரில் முதல் முதலாக தமிழ்நாடு அரசின் வழிகாட்டத்தின்படி, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மார்ச்  25 அன்று துவங்கிய புத்தகத் திருவிழா  ஏப்ரல் 2 அன்று நிறைவு பெற்றது. புத்தகத் திருவிழாவையொட்டி மாவட்டத்தில் உள்ள வட்டார கல்வி நிலையங்களில் இருந்து மாணவ, மாணவிகளை கலந்து கொண்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் வகையில் மாவட்ட கல்விதுறை சார்பில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  புத்தகத் திருவிழாவில் பல்வேறு பதிப்பகத்தின் சார்பில் 60 புத்தக விற்பனை நிலையங்கள் அமைக்கப் பட்டு இருந்தன. தினந்தோறும் ஆயி ரக்கணக்கான  பள்ளி, கல்லூரி மாண வர்கள் முதல் கொண்டு பொதுமக்கள் மற்றும் புத்தக வாசிப்பாளர்கள் ஆர்வத்துடன் தங்களுக்கு தேவை யான புத்தகங்களை வாங்கி சென்றனர்.  இந்நிலையில், அடுத்த ஆண்டும் புத்தகத் திருவிழாவினை நடத்த வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு மாவட்ட  ஆட்சியர் சாருஸ்ரீ தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர்  ப.சிதம்பரம் முன்னிலை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ், மாவட்ட ஊராட்சி தலை வர் தலையாலமங்கலம் ஜி.பாலசுப்பிர மணியன் மற்றும் எழுத்தாளர் ஐ.வி.நாகராஜன், தமுஎகச மாவட்டத் தலை வர் மு.சௌந்தரராஜன், செயலாளர் ஜீ.வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர். கருத்தரங்கத்தில் “தஞ்சை எழுத்து எழுதப்பட்டதும் எழுதப்பட வேண்டியதும்” என்ற தலைப்பில் எழுத்தாளர் அருள்மொழி நங்கை  மற்றும் “இலக்கியமும் பன்மைத்துவ மும்” என்ற என்ற தலைப்பில் எழுத்தா ளர் காளிப்பிரசாத் உரையாற்றினர். நிறைவாக “ஊர் கூடி இழுக்க  வேண்டிய தேர்”என்ற தலைப்பில் திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ண குமார் கருத்துரை ஆற்றினார். தொடர்ந்து வட்டார அளவில் பள்ளிகளில் இருந்து போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.  (ந.நி.)

;