tamilnadu

img

அண்ணாமலைக்கு நேரம் சரியில்லை

விடுதலைப் போராட்டத்தின் போது, சுதேசி கப்பல் ஓட்டியதன் மூலம்  தன்னுடைய தேச பக்தியையும், சுதேசி உணர்  வையும் வெளிப்படுத்தினார் வ.உ.சிதம்பர னார். இதன்காரணமாக அவரை பழிவாங்கி ஓட்டாண்டி ஆக்கியது அன்றைய பிரிட்டிஷ் அரசு. விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதி யாக அந்நிய துணிகளை புறக்கணிக்குமாறு அண்ணல் காந்தியடிகள் அறைகூவல் விடுத்தார்.  ஆனால் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்காத பாஜகவினரின் மூதாதையர்கள் வழியில் இன்றைய பாஜகவினர் தங்களது தேச  பக்தியை வித்தியாசமான முறையில் வெளிப்  படுத்துகின்றனர். பிரதமர் நரேந்திரமோடியின் ஆடம்பர மான ஆடைகளுக்கான செலவு பெரும் சர்ச்சை யை ஏற்படுத்தியுள்ளது. ஒரு எளிய நாட்டின் பிர தமரைப் போல அவர் நடந்து கொள்ளவில்லை. அவர் மட்டுமல்ல, அவரது கட்சியைச் சேர்ந்த  தலைவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள் என்பதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை உதாரணமாக மாறியுள்ளார். 

அவர் கையில் கட்டியிருக்கும் கடி காரத்தின் மதிப்பு ரூ.5 லட்சமாம். இதுகுறித்து  கேள்வி எழுப்பப்பட்ட போது, “இது ரபேல் நிறு வனம் தயாரித்தது. ரபேல் விமானத்தை ஓட்டக்  கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே விமான உதிரி பாகங்களைக் கொண்டு தயா ரிக்கப்பட்ட இந்த கடிகாரத்தை அணிந்துள் ளேன். என் உடலில் உயிர் இருக்கும் வரை என் கையில் இருக்கும். நான் தேசியவாதி. ரபேல் நமது நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம். இந்த கடிகாரம் உலகத்திலேயே ஐநூறு பேரி டம் மட்டும்தான் உள்ளது. அதில் ஒன்றுதான்  இது” என்று தன்னுடைய தேச பக்தியை அள வுக்கு அதிகமாக பொங்க விட்டுள்ளார்.  அவர் ஏன் தரையில் கால் பதிக்காமல் பறந்து கொண்டிருப்பது போலவே நடந்து கொள்கி றார் என்பதற்கான விடை இப்போதுதான் கிடைத்துள்ளது. 

ஆயிரத்தில் ஒருவன் என்பார்கள். ஆனால் இவரோ ஐநூறில் ஒருவர். ரபேல் விமானம்  வாங்கியதில் பெரும் தொகை கைமாறியிருப்ப தாக புகார் எழுந்தது. ஏற்கெனவே தீர்மா னிக்கப்பட்ட தொகையை விட கூடுதலாக ரபேல் நிறுவனத்திடமிருந்து விமானங்களை ஒன்றிய அரசு வாங்கியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந் தது. இதுதொடர்பாக, பிரான்ஸ் அரசு விசார ணைக்கு உத்தரவிட்டது. ஆனால் இங்கு நாடாளு மன்றக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை மோடி அரசு  ஏற்கவில்லை. அந்த ஊழலை நினைவுப்படுத் தும் வகையில், அண்ணாமைலையாரின் ரபேல் கடிகாரம் அமைந்துள்ளது. இந்த கடிகாரத்தை உயிர் உள்ளவரை கழற்ற மாட்டேன் என்று சொல்லும் அளவுக்கு அண்ணாமலை உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார்.  ஊழல் புகாருக்கு உள்ளான ஒரு நிறுவனத் தின் தயாரிப்பை கட்டிக் கொள்வதுதான் தன்னுடைய தேசபக்தியின் அடையாளம் என்கி றார். ஒரு புறத்தில், மேக் இன் இந்தியா என்பார்  கள். மறுபுறத்தில் இந்திய தயாரிப்பான எச்எம்டி கடிகாரத்தை ஊற்றி மூடிவிட்டு, அந்நிய கடி காரத்தை கட்டிக் கொண்டு கையை ஆட்டுவார்  கள். அண்ணாமலையின் கடிகாரம் இப்போது பேசு பொருளாகிவிட்டது. எத்தனை லட்சம் கொடுத்து கடிகாரம் வாங்கி கட்டினாலும் அது அந்தந்த நேரத்தைத் தான் காட்டுமே தவிர,  அதற்கு மேல் எதையும் செய்யப் போவதில்லை.

இதுகுறித்து கேள்வி எழுந்தவுடன் வழக்கம் போல வாய்ச்சவடால் அடிக்கிறார்  அண்ணாமலை. என் வாழ்நாள் வருமானத்தை  வெளியிடத் தயார் என்கிறார். ஆனால் கடி காரத்தை எப்படி வாங்கினேன் என்று மட்டும் சொல்ல மறுக்கிறார். தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி, வெறும் 4 ஆட்டுக் குட்டிகள் மட்டுமே தனது சொத்து என்று கூறும் அண்ணாமலை, 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடிகாரத்தை வாங்கியது எப்படி; இதற்கான ரசீதை வெளியிட தயாரா  என்று கேட்டிருக்கிறார். என்னுடைய அசை யும் சொத்து, அசையா சொத்து அனைத்தை யும் வெளியிட தயார் என்று சவடால் அடிக்கி றார் அண்ணாமலை. மொத்தத்தில் ஐநூறு பேரில் ஒருவரான அண்ணாமலைக்கு நேரம் சரியில்லை.

- மதுக்கூர் இராமலிங்கம்