தீக்கதிர் நாளிதழின் வைரவிழா நிறைவைக் கொண்டாடும் விதமாகவும், திருப்பூர் மாவட்டத்தில் தொழிலாளர் வர்க்கமும் தொழில்துறையினரும் தீக்கதிர் நாளிதழுக்காக தொடர்ந்து 25 ஆண்டுகளாக சந்தாக்களை வாரி வழங்கி வருவதன் வெள்ளி விழா ஆண்டைக் கொண்டாடும் விதமாகவும், இந்த ஆண்டுக்கான தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தை துவக்கும் முகமாகவும் ‘அறிவியலாய் சிந்திப்போம்; பின்னலாய் இணைவோம்’ என்ற முழக்கத்துடன் மாபெரும் மாரத்தான் ஓட்டம் அக்டோபர் 1 (ஞாயிறன்று) நடைபெற்றது. முன்னதாக சனிக்கிழமை, மாரத்தான் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான சிறப்பு உடையை வெளியிட்டு தமிழ்நாடு அரசின் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசினார். மாரத்தானில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். (செய்தி, படங்கள் : 8)