tamilnadu

img

வாச்சாத்தி பெயர்ச்சொல் அல்ல, வினைச்சொல்! - உ.வாசுகி பேச்சு

தருமபுரி, நவ.10- வாச்சாத்தி என்கிற சொல் போராடும் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் சொல்லாக மாறியிருக்கிறது. வாச்சாத்தி பெயர்ச்சொல் அல்ல; அது வினைச்சொல் என மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர்உ.வாசுகி கூறினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், வாச்சாத்தி வழக்கு வெற்றி விழா பொ துக்கூட்டம் வாச்சாத்தி கிராமத்தில் நடைபெற்றது. மாதர் சங்க தருமபுரி மாவட்டத் தலைவர் அ.ஜெயா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர்கள் உ.வாசுகி, பி.சுகந்தி, மாநில பொதுச்செயலாளர் அ.ராதிகா, மாநில பொருளாளர் ஜி.பிரமிளா, புரவலர் என்.அமிர்தம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு ஆகியோர் உரையாற்றினர்.  முன்னதாக மாதர் சங்க தலைவர்களை வாச்சாத்தி பெண்கள் ஆரத்தி எடுத்து மேளதாளத் துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, வாச்சாத்தி வழக்கில் மன உறுதியோடு நின்ற போராளிகளை அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி உள்ளிட்ட தலைவர்கள் கௌரவித்து, கேடயம் வழங்கினர்.

பின்னர் உ.வாசுகி பேசுகையில், வாச்சாத்தி வழக்கு தீர்ப்புக்கு பிறகு வாச்சாத்தி பெயர்ச் சொல் அல்ல, வினைசொல், வாச்சாத்தி என்றாலே போராட வேண்டும் என்ற எண்ணம் வரும். வாச்சாத்தி வன்கொடுமை சம்பவத்திற்கு பிறகு மாதர் சங்கம் பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரில் விசா ரித்து, நடந்த கொடுமைகளை வெளி உலகத்திற்கு எடுத்துச் சொல்லியது, அப்போது மைதிலி சிவ ராமன் அவர்கள், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து வாச்சாத்தி மக்களின் பாதிப்பு குறித்து கேட்டறிந்து எஸ்சி/எஸ்டி, ஆணையத்திடம் புகார் மனுகொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பாமதி ஐஏஎஸ், வாச்சாத்தி மக்களிடம், நடந்த வன்கொடுமைகளை நேரில் கேட்டறிந்தார். நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். அதன் பிறகு இந்த வழக்கு மத்திய புலனாய்வு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது. வாச்சாத்தியில்  வன்முறை செய்தது, சாதா ரண மக்கள் அல்ல, அரசு அதிகாரத்தில் இருந்த, வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் செய்த அரசு அதிகார வன்முறையா கும். 1992-இல் நடந்த சம்பவம் வழக்கு பதிவு செய்யப்படாமல், ஆர்டிஓ, விசாரணையில் மட்டுமே இருந்தது. பின்னர்  சட்ட போராட்டத்தினால் இந்த வழக்கு மத்திய புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குக்கிராமத்தில் உள்ள பழங்குடியினர் மீது ஆதிகார வர்க்கத்தினருக்கு  விழுந்த சம்மட்டி அடியாக 2011 - ஆம் ஆண்டு நீதிமன்றம் 269 பேரும் குற்றவாளிகளே என தீர்ப்பு வழங்கியது‌. 2011- ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கும் வரை அதிகார வர்க்கத்திற்கு அரசும், அதிமுக அமைச்சர் செங்கோட்டையனும், குற்றவாளிகளை பாது காத்தனர். வாச்சாத்தியில் எந்த சம்பவமும், தாக்குத லும், நடக்கவில்லை என அதிமுக அரசு சொன்னது. பாதிக்கப்பட்ட வாச்சாத்தி மக்களை, பெண்களை, சென்னையில் திரட்டி இதர பெண்களுடன் போராட் டம் நடத்தி, உண்மையை சொல்லி அதிமுகவுக்கு பதிலடிகொடுத்தோம், 30 ஆண்டுகால போராட்டம்  அதற்கு கிடைத்த தீர்ப்பு உலக வரலாற்றில் முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. 

ரஷ்யப் புரட்சி போல...

ரஷ்யாவில் மாபெரும் தொழிலாளி வர்க்கப் புரட்சி நடைபெற்று தொழிலாளி வர்க்கம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த புரட்சி சுதந்திரத்திற்காக போராடிய மற்ற நாடுகளுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது. இந்தியாவிலும் அது தாக்கத்தை ஏற்படுத்தியது. ரஷ்யப் புரட்சி எப்படி மற்ற நாடு களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படுத்தியதோ, அதே  போன்று வாச்சாத்தி போராட்டத் தீர்ப்பு, இந்தியா விற்கே வழிகாட்டுகிறது.  கம்யூனிஸ்ட் என்றாலே, அநீதிக்கு எதிராக போராடுபவர்கள், மராட்டிய மாநிலத்தில் வார்லி பழங்குடி மக்களை ஒன்று  திரட்டி போராடி வெற்றி கண்டது, அகில இந்திய விவசாயிகள் சங்கமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்தான் என்றார். தொடர்ந்து பேசுகையில், நாங்கள் என்ன நினைக்கிறோமோ, அதை செய்தே தீருவோம் என்கிறது மோடி அரசு. எங்களுக்கு அதானியும், அம்பானியும்தான் முக்கியம் என கார்ப்பரேட்டுக ளுக்கு ஆதரவு அரசாக செயல்பட்டுவருகிறது. மணிப்பூர் மாநிலத்தில் என்ன செய்தது. குக்கி பழங்குடி மக்களை மலைப்பகுதியில் இருந்து விரட்ட வேண்டும். மலைப்பகுதியில் உள்ள கனிம வளங்களை கார்ப்பரேட்களுக்கு தரவேண்டும், என்ற நோக்கத்தில் மத மோதலை உருவாக்கி திட்டமிட்ட வன்முறையை ஏற்படுத்தியது. நடைபெறுவது மோடி ஆட்சி அல்ல, ஆர்எஸ்எஸ் ஆட்சி, மநுவை போற்றும் உயர்சாதி தத்துவத்தின் அடிப்படையிலும், சித்தாந்தத்திலும் ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்த ஆட்சி தலித், பழங்குடி மற்றும் பெண்கள் உழைப்பாளி மக்க ளுக்கு எதிரான ஆட்சி. இந்த ஆட்சி இருக்கும் வரை நம்போன்ற மக்களுக்கு நீதி கிடைக்காது. எனவே மக்களை திரட்டி அரசியல் போராட்டம் நடத்த வேண்டும். மீண்டும் சாதி மதத்தை சொல்லி மீண்டும் ஒரு முறை அதிகாரத்திற்கு வர பாஜக நினைக்கிறது. மதநல்லிணக்கம், சமூக நல்லி ணக்கம் ஜனநாயகத்தை பாதுக்காக்க பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்றார்.

பறை சாற்றும் ஆலமரம்

பி.சுகந்தி பேசுகையில்: 31 ஆண்டுகாலம் போராட்டம் குறித்து இந்த கிராமத்தில் உள்ள ஆல மரம் பறைசாற்றுகிறது. வாச்சாத்தியில் நடந்த அதி கார வர்க்கத்தின் தாக்குதலை வெளி உலகத்திற்கு சொன்னவர்கள் பாப்பா உமாநாத் மைதிலி சிவராம னும். 31 ஆண்டுகாலம் கழித்து வரலாற்று தீர்ப்பு கிடைத்துள்ளது. இந்தியா முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்க ளுக்காக குரல் கொடுக்கும் இயக்கம், மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. நாடு முழுவதும் எண்ணற்ற போராட்டங்களை மாதர் சங்கமும் மார்க்சிஸ்ட் கட்சியும் நடத்தியுள்ளது. தலித் மக்கள் கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பில் மிகவும் பின்தங்கியுள்ளனர். தலித் மக்களுக்காக ஒதுக்கப்படும் துணைதிட்ட நிதி செல விடப்படாமல், வேறு திட்டங்களுக்கு செயல்படுத்தப் படுகிறது. சமூக ஆர்வலர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டதில், அரசு பதில் அளித்து இருக்கிறது. கடந்த 6 ஆண்டுகளில் ரூ.75690 கோடி தலித் மக்களின் துணைதிட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.8700 கோடி வேறு திட்டங்களுக்கு செலவிடப்பட்டதாகவும், ரூ.5000 கோடி திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலித் மக்கள் கல்வியிலும் பொருளாதா ரத்திலும் முன்னேற்றமடையவில்லை. தலித் மக்களுக்கு ஒதுக்கப்படும்‌ துணைதிட்ட நிதி முழு மையாக செலவிடப்படும் என தமிழக முதல்வர் தெ ரிவித்துள்ளார். இதனை தமிழக அரசு முறையாக கண்காணித்து தலித் மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்நிகழ்வின் முன்னதாக, மாதர் சங்க மூத்த தலைவர் புரவலர் என்.அமிர்தம் சங்க கொடியை ஏற்றி வைத்தார். இதில், மாதர் சங்கத்தின் முன் னாள் மாவட்டச் செயலாளர்கள் பி.பங்கஜவள்ளி, எஸ்.கிரைஸாமேரி, மாவட்டச் செயலாளர் இரா.மல்லிகா, மாவட்டப் பொருளாளர் எஸ்.வளர்மதி, பாப்பிரெட்டிப்பட்டி வட்ட தலைவர் அ.கண்ணகி, மாவட்டக்குழு உறுப்பினர் கே.பூபதி,பி.கிருஷ்ண வேணி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.