திருப்பூர், அக். 10 - மோடியின் மோசமான ஆட்சி காரண மாக இந்தியாவில் அடித்தட்டு மக்கள் வாழ்வு நொறுங்கிப் போயுள்ளதாக திருப்பூர் பொதுக்கூட்டத்தில் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டினார். திருப்பூர் எம்எஸ் நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகர குழு சார்பில் சமூக நல்லிணக்க பொதுக் கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் கட்சியின் திருப்பூர் வடக்கு மாந கர செயலாளர் பி.ஆர்.கணேசன் தலைமை தாங்கினர். கொட்டும் மழையி லும் பெருந்திரளானவர்கள் பங்கேற்ற னர். இதில் கட்சியின் மாநில செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், எட் டாண்டு கால மோடி ஆட்சியில் நாடு சுடு காடாக மாறிக் கொண்டிருக்கிறது. வர லாறு காணாத பண வீக்கம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, விலைவாசி பல மடங்கு உயர்கிறது. வேலையில்லா திண்டாட் டம் கடுமையாக அதிகரித்துள்ளது.
இலங்கையைப் போன்ற நிலை இங் கும் வரக்கூடிய நிலை உள்ளது. 2023 ஆம் ஆண்டு உலகம் மிகப்பெரிய நெருக் கடியை சந்திக்கப் போகிறது, பொருளா தார வீழ்ச்சி ஏற்படும் என்று ஐஎம்எப் கூறு கிறது. இத்தகைய சூழ்நிலையில் மோச மான ஆட்சி காரணமாக இந்தியாவில் அடித்தட்டு மக்கள் வாழ்வு நொறுங்கிப் போயுள்ளது. அதே சமயம் மோடியின் ஆட்சியில் உலகின் முதல் பெரும் 10 பணக்காரர்களில் நான்கு பேர் இந்தி யர்கள் இடம் பிடித்துள்ளனர். மோடி யின் நண்பர் அதானி உலகின் இரண்டா வது பணக்காரராக மாறியிருக்கிறார். அவரது சொத்து மதிப்பு ரூ.15 லட்சம் கோடி. ஒரு நாள் வருமானம் ரூ.1100 கோடி. நூறு நாள் வேலைக்கு ஒரு நாள் கூலி ரூ.150க்கு ஆளாய்ப் பறக்கும் மக் கள் வாழும் நாட்டில்தான் இந்த நிலை. இந்தியாவின் சிறு, குறு நடுத்த ரத் தொழில்கள் நொறுங்கிக் கொண்டி ருக்கின்றன. சிசிஐ கொள்முதல் செய்ய வேண்டிய பருத்தியை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்கும் கார்ப்பரேட்டுகள் ஒரு கண் டிக்கு ரூ.60 ஆயிரம் வரை கூடுதல் லாபம் வைத்து கொள்ளையடித்துள்ளனர்.
இதனால் நாடு முழுவதும் ஜவுளித் தொழில் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. கடன் வலையில் சிக்கித் தவிப்போருக்கு எந்த கருணை யும் காட்டப்படுவதில்லை. ஆனால், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ரூ.10.75 லட்சம் கோடி தள்ளுபடி செய்கிறது அரசு. எனவேதான் ஆர்எஸ்எஸ் பாஜகவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி திமுகவுடன் கரம் கோர்த்துப் போராடி வருகிறது. 2019 நாடாளுமன்றத் தேர்த லிலும், 2021 சட்டமன்றத் தேர்தலிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி யாக ஒரே அணியாக இருந்து பாஜக கூட்டணியை வீழ்த்தினோம். அதே போல் 2024 நாடாளுமன்றத் தேர்தலி லும் திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெறுவதற்கு இணைந்து பணி யாற்றுகிறோம். அதே சமயம், ஒன்றிய அரசு உதய் மின் திட்டம், உள்ளாட்சிகளுக்கு நிதி தருவது ஆகியவற்றைச் சொல்லி மின் கட்டணத்தை உயர்த்தவும், சொத்து வரியை அதிகரிக்கவும் மாநில அர சைக் கட்டாயப்படுத்தி, நிர்பந்தம் கொடுக்கிறது. மாநில அரசுக்கு உத்த ரவு போட அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? திமுக நண்பர்கள் ஒன்றிய அரசை எதிர்த்து இது போன்ற பிரச்சனை களில் ஒன்றிணைந்து களம் காண வேண்டும். அவர்களுக்கு அடிபணிந்து சொத்து வரி, மின் கட்டணத்தை உயர்த் துவது மக்கள் மத்தியில் திமுக அரசு மீது தேவையற்ற அவநம்பிக்கையை உருவாக்கும்.
இதன் மூலம் திமுக செல் வாக்கு குறைந்தால் ஆர்எஸ்எஸ், பாஜகவை கூட்டாக சேர்ந்து வீழ்த்துவ தற்கான போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும். மக்கள் நலன் பாதிக்கும்போது, அதற்கு எதிராகப் போராடுவதற்கு மார்க்சிஸ்ட் கட்சி தயங்காது. மார்க் சிஸ்ட் கட்சி கொள்கை, கோட்பாடு வேறு, திமுக கொள்கை, கோட்பாடு வேறு. பாஜக என்ற பாசிசப் பேயை விரட்ட ஒற்றுமை தேவை. அதேசமயம் மக்கள் தலையில் சுமையை ஏற்றுவதை மார்க்சிஸ்ட் கட்சி ஏற்காது. அனைத்து பணிகளையும் ஒப்பந்தத் தொழிலாளர்களாக, அவுட் சோர்சிங் விடுவதை ஒழித்துக் கட்ட வேண்டும். பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சாதிய ஏற்றத்தாழ்வு, பட்டியலின மக்கள் உரிமை மறுப்பு களையப்பட வேண்டும். கேரளத்தில் கம்யூனிஸ்ட்டுகள் சாதிய பாகுபாடு, ஏற்றத்தாழ்வை களைந்திருக்கிறோம். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக லாம் என பல்வேறு சாதிகளைச் சேர்ந்த 325 பேருக்கு பினராயி விஜயன் அரசு அர்ச்சகர் பணி உத்தரவு வழங்கியுள் ளது. கேரளத்தில் உயர்ந்த சாதியினர் எனப்படும் நம்பூதிரிகள் கூட கோயிலில் பட்டியலின அர்ச்சகர் தரக்கூடிய பிர சாதத்தை பயபக்தியோடு வாங்கிக் கொள்ளக்கூடிய நிலை உள்ளது. அந்த மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது கம்யூ னிஸ்ட் இயக்கத்தின் சாதனை என் றார்.