உலகின் பணக்கார விளையாட்டு அமைப்பில் ஒன்றான இந்திய விளையாட்டுத் துறையில் விளையாட்டுப் போட்டி,விளம்பரம்,முதலீடு என அனைத்து விதமான கோணங்களிலும் வருமானம் கிடைப்பதால் விளையாட்டு உலகில் முக்கிய மான இடத்தில் உள்ளது இந்தியா. அதாவது விளையாட்டு பிரிவில் நல்ல வருமானம் ஈட்டுவதும் இந்திய விளையாட்டுத் துறை தான். இந்நிலையில், கடந்த 5 வருடங்களில் ரூ. 7,072.28 கோடி ஒன்றிய விளையாட்டுத்துறைக்கு ஒதுக்கப்பட்டதாகவும், அதில் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ரூ. 6,801.30 கோடி விடு விக்கப்பட்டுள்ளது என ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் மக்களவையில் தகவல்.