திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத் ஆகியோர் புதனன்று (அக். 12) நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர் . உடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, இ.பெரியசாமி, மக்களவை உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், திராவிடர் தமிழர் இயக்க பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் உள்ளனர்.