திருவனந்தபுரம், ஜூலை 2- முதல்வரின் கோரிக்கை யின்றி அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தெரித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ஆளு நருக்கு அரசியல் சாசனம் அதற்கு அதிகாரம் அளிக்க வில்லை. இதுபோன்ற விவகாரங்களில் ஆளுநர் தன்னிச்சையாகச் செயல்பட முடியாது. செந்தில் பாலாஜி யை அமைச்சரவையில் அமர்த்தும் விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தவறுக்கு மேல் தவறு செய்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.