tamilnadu

பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு இருமடங்கு சாதனை!

பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு இருமடங்கு சாதனை!

அரசு  செய்திக் குறிப்பில் தகவல்

சென்னை, மே 11 - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் ஏற்றுமதியில் தமிழ் நாடு இருமடங்கு சாதனை படைத்து,  பல்வேறு துறைகளில்  முதலிடம் பிடித்துள்ள தாக தமிழ்நாடு அரசின்  செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதன்படி, முதலமைச்சர்  ஸ்டாலினின் தொடர் முயற்சி களால், தொழிற்சாலைகள் புதிது  புதிதாக தொடங்கப்பட, நம் நாட்டிற் குள்ளும், வெளிநாடுகளுக்கு சென்று செய்து கொள்ளப்பட்ட 897  புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஈர்த்துள்ள ரூ.10,27,547 கோடி புதிய  முதலீடுகள், புதிதாக உருவாக்கப் பட்டுள்ள 32.23 லட்சம் வேலை வாய்ப்புகள் காரணமாகத் தொழில்  வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம் எனப் புகழப்படுகிறது. இத்தகைய சிறப்பான நடவடிக் கைகளால் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவில், வேறு எந்த மாநிலமும்  அடையாத வளர்ச்சி யாக 9.69 சதவீத வளர்ச்சி கண்டு இந்தியா வில் முதல் மாநிலம் எனும்  பெருமையைப் பெற்றுள்ளது. தமிழ்நாடு முதலிடம்! பொருளாதார வளர்ச்சியில் 9.69  சதவீதம் பெற்று இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது, தோல் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் ஜவுளித் துணிகள் ஏற்று மதி, புத்தாக்கத் தொழில்கள் தரவரி சைப் பட்டியலில் 2018-இல்  கடைசி இடத்திலிருந்து தமிழ்நாடு, 2022 இல் முதலிடத்தை பிடித்திருக் கிறது. பெண் காவல் அதிகாரிகளைக் கொண்டுள்ளதில் தமிழ்நாடு முத லிடம், இந்திய அளவில் காலணிகள்  மற்றும் தோல் பொருள்கள் தயாரிப் பில் 38 சதவீதம் பெற்று  முதலிடம், அரசு மருத்துவமனை களில் பணிபுரியும் மருத்துவர்கள்  எண்ணிக்கையில் முதலிடம், வறுமை ஒழிப்பில் முதலிடம்,  இந்தியாவில் அதிக எண்ணிக்கை யில் செயல்படும் தொழிற்சாலை கள் முதலிடம், இந்தியாவிலேயே அதிக தொழிலாளர்களை கொண்டு உள்ளதில் தமிழ்நாடு முதலிடம். தொழிற்சாலைகளில் பணிபுரி யும் அதிக பெண் தொழிலாளர்க ளில், அதிகத் தொழிற்சாலைகளில் முன்னணி மாநிலம். உலகளாவிய திறன் மையங்களில் மும்பை, புனே, ஐதராபாத், பெங்களூரு முதலான நகரங்களைவிட சென்னை  24.5 சதவீத வளர்ச்சியுடன் 94,121 திறன் மையங்கள் கொண்டு இந்தி யாவில் தமிழ்நாடு முதலிடத்தில்  உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.