tamilnadu

img

அயோத்தியில் சூரிய ஒளி அரசியலின் ஒலியாக பிரதிபலிக்கிறது - எஸ்.கிருஷ்ணசாமி

அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் ஏப்ரல் 17 அன்று ராம நவமி அதாவது ராமர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. சரியாக நண்பகல் 12 மணிக்கு ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி படுவது போல் சில கண்ணாடிகளையும் லென்சுகளையும் பயன்படுத்தி இந்திய வான் இயற்பியல் துறை வல்லுநர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த செயலை மையப்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி அசாம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் பெரும் சாதனையாக முன்வைத்து பேசினார்.

500 ஆண்டுகள் தொடர் போராட்டத்தின் விளைவாக ராமர் அவரது சொந்த இடத்  தில் அமர்ந்திருக்கிறாராம்.ராமர் சிலையின்  மீது விழுந்த ஒளியின் புகைப்படங்களை சமூக ஊடகத்தில் பகிர்ந்து பெரும் சாதனை யை போல் சித்தரித்தார். ஆளும் பாஜக  அரசின் ஆதரவு ஊடகங்கள் ராம நவமிக்கு  சிறப்பு ஒளிபரப்பு செய்து ஆஹா ஒஹோ வென பிரச்சாரம் செய்துள்ளது. இப்போது தான் நவீன அறிவியலுக்கும் இந்திய பாரம்பரியத்திற்கும் உண்மையான பந்தம்  உருவாகியுள்ளது என்று மெச்சுகிறார் மோடி. 

அறிவியலை தவறாகப் பயன்படுத்துதல்

பிரதமர் மோடியை போலவேஏப்ரல்-17 அன்று ராமநவமி கொண்டாடப்பட்ட அன்  றைய தினத்தில் ஒன்றிய அரசின் அறி வியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் செயலாளர் அபய் கரந்திகர் அவரது எக்ஸ்(டிவிட்டர்) சமூக வலைதளத்தில் ராம  நவமி நிகழ்வை பெருமையாக அவரும் பகிர்ந்திருந்தார். ராமர் சிலை மீது சூரிய  ஒளி படுவதற்கு பெங்களூரில் உள்ள  இந்திய வான் இயற்பியல் மையத்தின்  (IIA-INDIAN INSTITUTE OF ASTROPHYSICS) துறை சார்ந்த வல்லு நர்கள் முக்கிய பங்களிப்பை செய்துள்ள தாகவும் தெரிவித்திருந்தார். அதனோடு மத்திய கட்டுமான ஆராய்ச்சி நிறுவனம் (CBRI) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைக்குழு (CSIR) மற்றும் அரசு  உதவி பெறும் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவை ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகளில் முக்கிய பங்களிப்பு செய்துள் ளன. நவம்பர்-2022 அன்று சிஎஸ்ஐஆர் (CSIR) ராமர் கோவில் கட்டுமான பணிகளில்  ஈடுபடப் போகிறோம் என அறிவித்த போதே  300க்கும் மேற்பட்ட அறிவியல் விஞ்ஞானி கள் இந்திய அறிவியல் துறைக்கு கடிதம்  எழுதினார்கள். மதம் சார்ந்த நிகழ்வுகளில் அரசின் அறிவியல் துறை ஈடுபடுவது சட்ட  விரோதம் என தெரிவித்திருந்தனர். அறி வியல் மனபான்மைக்கு எதிரானது என்ற னர். அறிவியல் ஆராய்ச்சி துறையின் செய லாளர் பதிவு பல விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. ஏன் அவர் தன் பொறுப்பிற்கு ஏற்றார்போல் செயல்படா மல் சாதாரண லென்ஸ் மற்றும் கண்ணா டியை வைத்து மூன்றாவது தளத்தில் விழும்  சூரிய ஒளியை சிலையில் விழச் செய்யும்  சாதாரண வேலையை பெரும் சாதனை யாக ஏன் சித்தரிக்கிறார்..? எதற்கு எறும்பை  கொல்ல பீரங்கியை கொண்டு போக  வேண்டும் என்றும் கேள்வியெழுப்பி யுள்ளனர்.

இதே ஐஐஏ அறிவியல் நிறுவனம் ஆதித்யா எல்1 விண்வெளி தளத்திற்காக  ரிமோட் சென்சிங்க் பேலோடுகளை வடி வமைத்துள்ளது. இது சூரியனிலிருந்து தரவுகளை பூமிக்கு கொடுக்கும். இது  முதன் முதலாக தயாரிக்கப்பட்ட இந்தியக்  கலம் ஆகும். அதே போல் இஸ்ரோ  ஆதித்யா எல்-1 சரியான இடத்தில் நிலை நிறுத்த தேவையான கணக்கீடுகளை வெற்றிகரமாக மேற்கொண்டது. அது எப்போதும் சூரியனை எதிர்கொள்ளும் வகையில் இருக்கும். ஆனாலும் எந்த தடையுமின்றி பூமிக்கு தகவல்களை கொண்டு வரும். இப்படி அசாத்தியமான செயல்களை செய்த அரசு அறிவியல் நிறுவனங்களை மத விவகாரங்களுக்காக பயன்படுத்த வேண்டுமா என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள். இந்துத்துவா கும்பல் அறிவியலை பயன்படுத்துவதில் ஆழமான முரண்பாடு களை கொண்டுள்ளனர். பண்டைய கால  அறிவியலை மிகைப்படுத்தி கற்பனைக்கு எட்டாத கதைகளை பேசுவதும் இன்னொரு புறம் நவீன அறிவியலை தங்களது பிற்போக்குத்தனமான சிந்தாந்தத்தை வலுப்படுத்தவும் பயன்படுத்துகிறார்கள். கொரோனா தொற்றின் போது வீடுகளில் விளக்கு ஏற்றியதையும், தட்டுக்களை தட்டியதையும் நாசாவின் விண்கலத்தில் பதிவு செய்யப்படுகிறது என்றும் இதன் மூலம் வெளிப்படும் கதிர்களால் கொரோனா வைரஸ் ஒழிக்கப்படும் என்றும்  இந்துத்துவாதிகள் பொய்ப் பிரச்சாரத்தை பரப்பினார்கள். ராமர் பிறந்த இடத்தை துல்லியமாக சுட்டிக்காட்ட இந்திய செயற்கைக் கோள்  பயன்படுத்தப்பட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் உண்மை என்ன..? முதலில் சூரிய  ஒளி எங்கு விழுகிறது என்ற இடத்தை தேர்வு  செய்த பிறகு தான் ஜிபிஎஸ் பயன்படுத்தி சிலைய நிறுவவதற்கு ஏற்றார்போல் இடத்தை தேர்வு செய்தனர்.

பண்டைய அறிவு

நவீன அறிவியல் தவறாகப் பயன்படுத் தப்படுவதால் பண்டைய இந்தியர்களின் அறிவு கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. சூரிய திலகம் என அழைக்கப்படும் ராமர்  நெற்றியில் விழும் சூரிய ஒளி இப்போ துதான் புதிதாக உருவாக்கப்பட்டதா? இதற்குமுன் வேறு எங்கும் அது போல் இல்லையா என கேள்வியெழுப்பினால் இந்தியாவின் பல இடங்களில் இது போன்ற வடிவமைப்புகள் செய்யப்பட்டி ருக்கிறது என்ற உண்மை தெரிய வரு கிறது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கவி கங்காதேஸ்வர கோயிலில் ஒவ்வொரு மகர சங்கராந்தியின் போதும் சூரிய ஒளி குகைக் கோயிலில் உள்ள நந்தியின் சிலை யின் கொம்புகளுக்கு இடையில் விழுந்து பிறகு சிவன் சிலையையும் தொடுகிறது. பிறகு கருவறை முழுவதும் சூரிய ஒளி படர்கிறது. ஒடிசா மாநிலத்தில் கோனார்க் என்ற ஊரில் சூரியனை கடவுளாக வழிபட்டு பிறகு கோனார்க் சூரிய கோயிலை 13 ஆம்  நூற்றாண்டில் கட்டியுள்ளனர். இதன் வாயிலை தொடுவது போல் சூரிய ஒளி  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை உலக  பண்பாட்டுச் சின்னமாக 1984 ஆம் ஆண்டு  யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்திருந்தது. தமிழ்நாட்டில் திருச்சி கல்லணை சாலையில் உள்ள சர்க்கார்பாளையத்தில் உள்ள காசி விசுவநாதர் கோயிலில் உள்ள  சிவலிங்க சிலையின் மீது ஆவணி 7, 8, 9 தேதிகளில் காலை 6-6.30 மணிக்கு சூரிய ஒளி விழுகிறது. ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே நாகலாபுரம் வேதநாராயணா கோயில் கர்ப்பகிரகத்தில் மார்ச் 25, 26, 27 தேதி களில் மாலை 6 மணி முதல் 6.15 மணிக்கு  சூரிய ஒளி விழும்படி வடிவமைக்கப் பட்டுள்ளது.  இதே போல் உத்தரகண்ட் மாநிலத்தில் அல்மோராவில் உள்ள கோயிலில் அக்டோபர் 22, பிப்ரவரி 22 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி விழுவது போல் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மகாவீர் ஜெயின், மகாத்மாகாந்தி...

நரேந்திர மோடி முதல்வராக இருந்த  மாநிலமான குஜராத்தில் கூட கொளுத்தும் வெயிலிலும் ஜைன பக்தர்கள் ஆராதன கேந்திராவில் மகாவீர் ஜெயின் நெற்றி யில் விழும் சூரிய ஒளியை காண்பதற்கு ஆயிரக்கணக்கானோர் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம்-22 நண்பகல் 2.07 மணிக்கு கூடுகிறார்கள். இது குறித்து கோயில் நிர்வாக அதிகாரிகள் பண்டைய காலத்தில் வாழ்ந்த கணிதம், வானியல் மற்றும் சிற்பக்கலை அறிஞர்கள் திறமை யால் இது சாத்தியமானது என்றும் இதில்  மாய மந்திரம் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கிறார்கள். இந்தியாவின் தேசப்பிதா மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே என்ற இந்  துத்துவ பயங்கரவாதியால் சுட்டுக்கொல் லப்பட்டார். பிறகு மகாத்மா காந்தியின் அஸ்தி 12 வெவ்வேறு கலசங்களில் வைக்  கப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அதில் ஒரு இடமான கன்னியாகுமரியில் அஸ்தியின் கரைப்பதற்கு முன் கலசம் வைக்கப்பட்ட இடத்தில் காந்தியின் நினைவு மண்டபம் கட்டப்பட்டது. மகாத்மா காந்தியின் பிறந்ததினமான அக்டோபர்-2 அன்று கலசம் வைக்கப்பட்ட இடத்தில் சூரிய ஒளி படும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படியாக நாட்டின் பல இடங்களில் பண்டைய இந்தியர்களின் அறிவினால் ஏற்படுத்தப்பட்ட ஒன்றை ஏதோ அயோத்தி ராமர் கோயிலில் தான் புதிதாக இது போன்ற முயற்சி நடைபெற்றதாக பிரச்சா ரம் செய்கிறார் மோடி. இந்த முயற்சிக்கு  நாட்டின் முக்கிய அறிவியல் துறைகள்  பயன்படுத்தப்பட்டுள்ளது வேதனைக்குரி யது. கடந்த காலத்தில் பாபர் மசூதியை வைத்து பிரச்சாரம் செய்தது போல் இம்முறை எடுபடாது என்பதால் அயோத்தி யில் கோயிலுக்கு அறிவியல் முலாம்  பூசப்பட்டு மிகப்பெரும் சாதனையாகச் சித்தரித்து மக்களை ஏமாற்றப் பார்க்கி றார். இதில் உள்ள உண்மைகளை அறி வியலாளர்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழில்: மோசஸ்பிரபு
 

;