tamilnadu

img

சன் பார்மா நிறுவனத்திற்கு ரூ.10 கோடி அபராதம்: தேசிய பசுமை தீர்ப்பாயம்

சென்னை,செப்.30- வேடந்தாங்கல் பகுதியில் சுற்றுச்சூழல் தடையில்லா சான்று பெறாமல் மருந்து ஆலை விரிவாக்க  பணிகளை மேற்கொண்ட “சன் பார்மா” நிறுவனத்திற்கு ரூ. 10  கோடி அபராதம் விதித்து தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 400 ஆண்டுகால வரலாற்று சிறப்புகளை கொண்ட வேடந்தாங்கள் பறவைகள் சரணாலயத்தை அழிப் பதற்கு தனியார் நிறுவனமான சன் பார்மா மருந்து தொழிற்சாலை நிர்வாகம், ஒன்றிய பாஜக அரசிடம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அனைத்து வகையிலும் முயற்சிகள்  மேற்கொண்டு வந்தது. அதன்  கைவரிசைகள் மற்றும் கிராமவாசி களின் ஆதங்கல்களையும் கடந்த 2020 ஆண்டில் தீக்கதிரில் கட்டுரை யாக வெளியிட்டோம். அதில், “நமது வாழ்வாதாரத் திற்கு நீர் எவ்வளவு அவசியமோ?

அது போல பறவைகளின் வாழ்விற்கும் நீர்நிலைகள் அவசியம் என்பதால் வனத்துறையும் முதலமைச்சரும் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை யும் அந்த செய்தி கட்டுரையில் சுட்டிக் காட்டிருந்தோம். இதற்கு விளக்கம் அளித்த  முதன்மை தலைமை வனப்பாதுகாவ லர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர்,“ வேடந்தாங்கல் பறவை கள் சரணாலயம் மற்றும் சுற்றியுள்ள 5 கி.மீ. பகுதியை எந்தவொறு தனி யார் நிறுவனத்திற்கோ, தொழிற் சாலை அமைக்கவோ, வர்த்தக நிறுவனத்திற்கோ உதவவோ நடவடிக்கை எடுக்கவில்லை” என்றும் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, செங்கல் பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை ஒட்டி  1992ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு  வரும் மருந்து உற்பத்தி நிறுவன மான சன் பார்மாவின் மருந்து உற்பத்தி அளவு 25.5 டன்னிலிருந்து 134 டன்னாக உயர்த்த முடிவெடுக்கப் பட்டது. அதன் ஆலை விரிவாக்கப் பணிகள் ஒன்றிய அரசிடம் முறை யான அனுமதி பெறாமல் நடை பெற்றது.

இதுகுறித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் தொடரப்பட்ட வழக்கில்,“ தமிழ்நாட்டில் வன உயிரின அல்லது பறவைகள் சரணாலயங்களை சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் பரப்பள வும் சரணாலயமாகவே கருதப்படும் என்று விதிகள் உள்ளது. ஆனா லும் விரிவாக்க பணிகளை மேற் கொள்வதற்கு சுற்றுச்சூழல் அனு மதி பெறவில்லை எனவும் கூறப்பட்டி ருந்தது. இந்த மனு தீர்ப்பாயத்தின் நீதித் துறை உறுப்பினர் கே.ராம கிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சன் பார்மா தரப்பில் கடந்த 1994இல் தான் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை விதிகள் உருவாக்கப்பட்டதாகவும், ஆனால் கடந்த 1992லிருந்து நிறுவனம் இயங்கி  வருவதால் தங்களுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த வாதத்தை ஏற்க மறுத்த தீர்ப்பாய உறுப்பினர்கள் பிறப்பித்துள்ள தீர்ப்பில், 1994 முதல் 2006 வரை ஆலையில் நடந்த விரிவாக்கப் பணிகளுக்கு 1994ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிவிக்கையின் கீழ் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் விரி வாக்கம் செய்தது சட்டவிரோதம் என கூறி, சன் பார்மாவிற்கு 10 கோடி  ரூபாய் அபராதம் விதித்து உத்தர விட்டுள்ளனர். ஆலை செயல்பாட்டால் உண்டான சேதம் குறித்து உரிய ஆய்வு  செய்து முழுமையான இழப்பீட்டை சன் பார்மாவிடம் இருந்து பெற வேண்டும் என மாசு கட்டுப்பாடு வாரி யத்திற்கும், அந்தத் தொகையை வைத்து பறவைகள் சரணாலயத் தைப் பாதுகாக்க செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும் என அரசுக்கும் உத்தரவிட்டுள்ளனர். ஆலையின் விரிவாக்கத்திற்கு மார்ச் 2022 ஆம் ஆண்டில் வழங்கப் பட்ட சுற்றுச்சூழல் அனுமதிக்கு எதிராகத் தொடரப்பட்ட மனு மற்றொரு அமர்வில் நிலுவையில் இருப்பதால், ஆலையை மூடுவது  குறித்து இந்த மனுவில் உத்தரவிட வில்லை எனவும் தீர்ப்பில் குறிப்பிட் டுள்ளனர்.