tamilnadu

img

ஸ்மார்ட் டீச்சரம்மா - சிதம்பரம் இரவிச்சந்திரன்

வகுப்புகள் எடுப்பார். கொரோனா நடை முறைகளை பின்பற்று வார். ரோபோட் டீச்சரம்மா. கேரளா மம்பரம் கீழப்பூர் யு பி (upper primary) பள்ளியில் சுறுசுறுப்புடன் செயல்படும் இந்த ரோபோட் டீச்ச ரம்மா ஸ்கூலிற்கு வரும் குழந்தை களை இதயப்பூர்வமாக வரவேற்பார். உடல் வெப்பநிலை அளப்பார். கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி பாடம் சொல்லிக்கொடுப்பார். மாணவர்களுக்கு மிகப்  பிடித்த இந்த டீச்சர் இப்போது ஊரிலும் பிரபல மான ஒரு புள்ளி. ஆன் லைனில் இருந்து ஆஃப் லைனில் பள்ளிக்கூடம் வந்த மாணவர்களுக்கு வகுப்பறை மீது நாட்டம் ஏற்படுத்த ஆசிரியர், ராகேஷ் இந்த ரோபோட் டீச்சரை உரு வாக்கி குழந்தைகளுக்கு அளித்துள் ளார். காலை ஸ்கூலிற்கு வரும் மாண வர்களுக்காக வாசற்படியில் ஸ்மார்ட் டீச்சர் காத்துக்கொண்டு நிற்பார். முதலில் மாணவர்கள் காலை வணக்கம் சொல்லவேண்டும்.

டீச்சர் திரும்ப வணக்கம் சொல்வார். ரோபோட் டீச்சரின் கையில் பொருத் தப்பட்டிருக்கும் வெப்பநிலை உணரி யில் (therman sensor) குழந்தைகள் தங்கள் கையைக் காட்டவேண்டும். உடனே திரையில் வெப்பநிலை தெரியும். பிறகு வாசல் வழியே மாண வர்கள் ஸ்கூலிற்குள் செல்லலாம். காய்ச் சல் இருந்தால் சிவப்பு விளக்கு எரியும். காய்ச்சலை சரி செய்ய ஆலோசனை கள் வழங்கப்படும். மாணவர் வருகையை பதிவு செய்யும் வசதியும் ரோபோட்டில் உள்ளது. சாதாரணமாக இந்த வேலை களை செய்ய இரண்டு ஆசிரியர்க ளேனும் தேவைப்படுவர். ஸ்மார்ட் டீச்சர் மூலம் ஆசிரியர்களின் வேலை பளுவைக் குறைக்கமுடியும். ஆங்கி லம், மலையாளம், ஹிந்தி போன்ற எந்த மொழியிலும் பாடம் நடத்தும்  இவர் மாணவர்களின் சந்தேகங்களை யும் தீர்த்துவைப்பார். ஒலி உணரி (sound sensor), அல்ட்ராசோனிக் உணரி (ultrasonic sensor), மூச்சுப் பகுப்பாய்வுக் கருவி (breath analyser), வெப்பநிலை உணரி (thermal sensor), 12 வோல்ட் பேட்டரி மின்சுற்றுப் பலகை (circuit board) ஆகியவற்றைக் கொண்டு இந்த ஸ்மார்ட் டீச்சர் செயல்படுகிறார். இவரை நேரில் சந்திக்க ஏராளமானவர்கள் ஸ்கூலிற்கு வருகின்றனர். கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் கேரள அரசு நவீன அறி வியல் தொழில்நுட்பங்களை எவ்வாறு மாணவர்களின் நன்மைக்குப் பயன் படுத்துகிறது என்பதற்கு இந்த ஆரம்பப் பள்ளிக்கூடத்தின் ஸ்மார்ட் டீச்சர் சிறந்த எடுத்துக்காட்டு.

;