கோயம்புத்தூர், டிச. 1 - 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக-வை தோற்கடிக்க அனைவரும் தீவிரமாக செய லாற்றுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அழைப்பு விடுத்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் கோயம்புத் தூரில், நவம்பர் 30, டிசம்பர் 1 ஆகிய தேதி களில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அர சியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ. வாசுகி, பெ. சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநி லக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செய லாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தையொட்டி, பொதுச்செய லாளர் சீத்தாராம் யெச்சூரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
5 மாநிலத் தேர்தலில் எடுபடாத மோடி பிரச்சாரம்
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் பூர்த்தி அடைந்துள்ளன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளிவந்துள்ளன. சத்தீஸ்கரிலும் தெலுங்கானாவிலும் காங்கிரஸ் வெற்றிபெறும் என இந்தக் கணிப்புகள் கூறுகின்றன. தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றிபெறும் எனும் கணிப்பு ஆச்சர்யமாக உள்ளது. மத்தியப் பிரதேசத்திலும் ராஜஸ்தானி லும் எந்தக் கட்சி வெல்லும் என்பது பற்றிய கணிப்புகள் வேறுபட்ட மதிப்பீடுகளை கொண்டதாக உள்ளன. இந்த முடிவுகள் எதைக் காட்டுகின்றன எனில், தேர்தல்களில் கடும் போட்டி நிலவியது. திரு. மோடியின் மிகத்தீவிர பிரச்சாரத்துக்கு பின்னரும் பாஜக-வுக்கு இந்த தேர்தல்கள் அவ்வ ளவு எளிதாக அமையவில்லை. பிரதமரும் உள்துறை அமைச்சரும் அனைத்து அமைச்சர்களும் கடுமையாக தேர்தல் களத்தில் பிரச்சாரம் செய்தனர். அப்படியிருந்தும் அவர்கள் எதிர்பார்த்தது போல மக்கள் சிந்திக்கவில்லை.
உற்பத்தியை நிறுத்திய 40 ஆயிரம் நிறுவனங்கள்
இன்று ரிசர்வ் வங்கி பொருளாதார வளர்ச்சி பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த காலாண்டில் ஜி.டி.பி. வளர்ச்சி 7.2 சதவிகித மாக இருக்கும் என கூறப்படுகிறது. சென்ற காலாண்டில் 7.8 சதவிகிதமாக இருந்த நிலையில் இப்பொழுது 7.2 சதவிகிதம் என மதிப்பிடப் பட்டுள்ளது. பாஜக அரசாங்கத்தின் சொந்த புள்ளிவிவர நிபுணர் புரனோப் சென் இந்த ஜி.டி.பி. கணக்கீடு முறைகள் மற்றும் விவ ரங்கள் தவறானவை எனவும் வளர்ச்சி 6.5 சத விகிதத்திற்கு மேல் இருக்க வாய்ப்பு இல்லை எனவும் கூறியுள்ளார். இன்றைய பொருளாதாரத்தின் உண்மை நிலையை நாம் கவனித்தால் பல அம்சங்கள் தெளிவாகும். சென்ற ஆண்டு 40,000 கார்ப்பரேட் நிறுவனங்கள் வருமானவரியின் வரம்பிலிருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளன. இதன் பொருள் என்ன? 40,000 நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி விட்டன. அதாவது 40,000 நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.
அந்நிய நேரடி முதலீடு 77 சதவிகிதம் சரிவு
ரிசர்வ் வங்கியின் விவரங்கள் என்ன கூறு கின்றன? 2023 ஏப்ரல் - செப்டம்பர் வரை யிலான காலத்தை, 2022 ஏப்ரல் - செப்டம்பர் காலத்துடன் ஒப்பிடும் பொழுது இந்தியா வுக்குள் வரும் நேரடி அந்நிய முதலீடு அதிர்ச்சி தரத்தக்க வகையில் 77 சதவிகிதம் சரிந்துள் ளது. ஆகவே வளர்ச்சி எங்கிருந்து வருகிறது? எப்படி இந்த கணக்கீடுகள் செய்யப்படுகின்றன? நம் தேசத்தில் வேலையின்மை உச்சத்தில் உள்ளது. 57 சதவிகித உழைப்பாளிகள் சுய தொழில் செய்கின்றனர் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இவர்கள் சுயவேலைவாய்ப்பு மூலம் சொற்பவருமானம் பெறுகின்றனர். எனினும் இவர்கள் வேலையின்மை பட்டியல் கணக்கில் சேர்க்கப்படமாட்டார்கள். ஆனால், எந்த ஒரு பொருளாதார நிபுணரும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
வேலையின்மை, விலைவாசி அதிகரிப்பு
வேலையின்மை அதிகரித்துள்ளது; விலை வாசி உயர்ந்துள்ளது. சர்வதேச பட்டினி மற்றும் ஏழ்மைக் குறியீட்டில் இந்தியாவின் நிலை வீழ்ச்சி அடைந்துள்ளதை நாம் கண்டோம். எனவே மக்களின் வாழ்வாதாரத்தின் மீது பெரிய தாக்கு தல் தொடுக்கப்பட்டு வருகிறது. அவர்களின் வாழ்வு நிலை மீது அதிக சுமை ஏற்றப்படுகிறது. மக்களின் இந்த துன்பங்களும் இன்னல் களும்தான் 5 மாநிலத் தேர்தல் கணிப்புகளில் பிரதிபலிக்கின்றன. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் இதுபெரிய அளவுக்கு பிரதி பலிக்கும் என நான் நினைக்கிறேன். மக்களிடம் அதிகரித்துவரும் அதிருப்தி - மதப்பிளவு வாதங்கள் கூர்மைப்படுத்த ப்படுவது- சிறுபான்மை மக்களை இலக்காகக் கொண்டு ஏவப்படும் வெறுப்பு மற்றும் பயங்கரவாத பிரச்சாரம்- தலித்- ஆதிவாசி மக்கள்- பெண்கள்- பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் விளிம்புநிலை மக்கள் பாதிக்கப்படுவது இவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாக வைத்து பார்த்தால் மத்தியில் ஆட்சி மாற்றம் என்பது அவசியமான தவிர்க்க இயலாத தேவை எனும் சூழல் உருவாகியுள்ளது.
ஜனநாயகத்தை பாதுகாக்க பாஜக-வை வீழ்த்துவோம்
மதச்சார்பற்ற ஜனநாயகம் எனும் விழு மியங்களை கொண்ட இந்திய குடியர சின் மாண்புகளைப் பாதுகாக்கவும் இந்தியா வின் அரசியலமைப்புச் சட்டத்தை பாது காக்கவும், ஜனநாயகம் மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும் திரு. மோடி அவர்களால் தலைமை தாங்கும் இந்த ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றப்பட வேண்டும் என்பது மிக மிக அவசியம். இதற்காக ‘இந்தியா கூட்டணி’யை வலுப் படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. அந்த நோக்கத்துடன்தான் இந்தியா கூட்டணி பணி யாற்றும். இந்த தேர்தல்கள் முடிந்தவுடன் இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டாக விவா தித்து எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கும். இது ஒரு முக்கிய அம்சம்.
உடைந்து நொறுங்கும் மோடியின் பிம்ப அரசியல்
அடுத்ததாக மோடி அரசாங்கம் ஒவ் வொரு அம்சத்திலும் ஒவ்வொரு பிரிவிலும் உண்மைக்கு மாறாக பொய்களையும் வெற்றுப் பிரச்சாரத்தையும் செய்துவிட்டு, தான் சாதித்ததாக பெருமை பீற்றிக் கொள்கிறது. ஆனால் உண்மையில் எந்த ஒரு முன்னேற்றத்தையும் சாதிப்பது இல்லை. மோடி அரசாங்கத்தின் அழுத்தமும் கவனமும் வெறும் பிரச்சாரத்திலும் பொதுப் பிம்பம் உருவாக்குவதிலும்தான் உள்ளது. இத்தகைய வெற்று பிரச்சாரங்களும் மிகைப் படுத்தப்பட்ட சாதனைகளும் பெருமை களும் உலகில் இந்தியாவின் நம்பகத்தன்மை யை நம் தேசத்தின் சர்வதேச அந்தஸ்தை வீழ்ச்சி அடையச் செய்வதற்கே வழி வகுத்துக் கொண்டுள்ளது. நாம் ‘ஜி20’ அமைப்புக்கு தலைமை தாங்குகிறோம். அது மிகைப்படுத்தப் பட்டது. ஒட்டுமொத்த வளரும் நாடுகளுக்கு தான்தான் தலைமை தாங்குகிறேன் என்பதாக மோடி பிம்பம் உருவாக்கப்பட்டது. ஆனால் ‘ஜி20’ அமைப்பில் நமது நிலைஎன்ன?
ஜி-20 நாடுகளிலேயே இந்தியாதான் மோசம்
தனி நபர் சராசரி ஜிடிபி-யில் நமது நாடு இந்த 20 நாடுகளில் 20-ஆவது இடத்தில் அதா வது கடைசி இடத்தில் உள்ளது. ஐ.நா. வெளியிடும் மனித வள மேம்பாடு குறியீடு பட்டியலில் நாம் மிக கீழே- அதாவது கடைசி இடத்தில் உள்ளோம். உழைப்பு பங்கேற்பு விகிதத்தில் அதா வது வேலையின்மை பற்றிய அம்சத்திலும் நாம் கடைசி இடத்தில் உள்ளோம். இத்தகைய அனைத்து அம்சங்களிலும் இந்தியா ‘ஜி20’ நாடுகளில் கடைசி இடத்தில் இருப்பதை நாம் பார்க்கிறோம். ஆனால் நாம்தான் சர்வதேச தலைவர் என பீற்றிக்கொள்கிறோம். இத்தகைய வெற்றுப் பிரச்சாரங்கள் நம் நாட்டின் மீதுள்ள நம்பகத்தன்மையை பாதிக்கிறது. இது ஒரு துரதிர்ஷ்டவசமான சூழல். இப்படி இதுவரை நடந்தது இல்லை. பல பிரதமர்கள் இருக்கும் பொழுது பல அமைப்புகளுக்கு தலைமை தாங்கியுள்ளோம். ஆனால் இப்படி நடந்தது இல்லை.
யுனெஸ்கோ தேர்தலில் பாகிஸ்தானிடம் தோல்வி
சமீபத்தில் வேறு ஒன்றும் நடந்துள்ளது. நேற்று முன்தினம் ஐ.நா.வின் யுனெஸ்கோ நிர்வாக குழுவுக்கு ஆசியாவிலிருந்து தேர்வு செய்யும் தேர்தல் நடந்தது. இதில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் 38 தேசங்களின் வாக்குகளை பெற்றது. இந்தி யாவுக்கு 18 வாக்குகள்தான் கிடைத்தன. நாம் வளரும் நாடுகளுக்கு தலைமை தாங்கு வது உண்மை எனில், இது ஏன் நடக்கிறது? ஏன் நாம் பாகிஸ்தானிடம் தோல்வி அடை கிறோம்? இதற்கு மோடி அரசாங்கம் பதில் அளிக்க வேண்டும். மூன்றாவதாக ஒரு மிகப்பெரிய குற்றச் சாட்டு அமெரிக்காவிடமிருந்து வந்துள்ளது. கனடா பிரதமர் போல இது ஒரு அறிக்கை யாக வெளிவரவில்லை. கனடா பிரதமர் கூறியதை மோடி அரசாங்கம் மறுத்து கொண்டுள்ளது. ஆனால் அமெரிக்க நீதி மன்றத்தில் இந்தியாவுக்கு எதிராக அர சுத்தரப்பு வழக்கறிஞர்கள் வழக்கையே தொடுத்துள்ளனர். சில நபர்களின் பெயர் களை குறிப்பிட்டு எப்படி இந்திய அரசு அமெரிக்க மண்ணில் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டுள்ளது என்பது கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா முன்வை க்கும் குற்றச்சாட்டு பற்றிய உண்மை நிலை என்ன? என்னதான் நடந்தது? என்பது பற்றி மோடி அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். இந்த விளக்கம் இந்திய மக்களுக்கும் உலகத்துக்கும் தேவை. அது தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
இந்தியா கூட்டணி வெற்றிக்குப் பாடுபடுவோம்
இந்த அரசாங்கம் அகற்றப்பட வேண்டும் எனும் இந்தியா கூட்டணியின் விருப்பமும் மதிப்பீடும் சரியானதே என்பதை இது மீண்டும் நிரூபிக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்தியா கூட்டணிக்குத் திமுக தலைமை தாங்குகிறது. 2024 தேர்தல்களில் அந்த அணியின் வெற்றிக்காக முழுமையாக செயல்படுவது என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளது. இந்த பணி யில் முழுமையாக ஈடுபடுமாறு அனைவரை யும் நாம் வேண்டுகிறோம். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார்.