tamilnadu

img

ஓய்வு பெற்றார் சைலேந்திரபாபு

சென்னை,ஜூன் 30- தமிழ்நாடு டிஜிபி சைலேந் திரபாபு வெள்ளிக்கிழமையோடு (ஜூன் 30) பணி ஓய்வு பெற்றார்.  இதையடுத்து காவல்துறை தலை மையகத்தில், புதியதாகப் பதவியேற்ற சங்கர் ஜூவாலிடம்  முறைப்படி பொறுப்புகளை ஒப்ப டைத்தார். அதனைத்தொடர்ந்து புதிய டிஜிபியாக சங்கர் ஜூவால் கோப்புகளில் கையெழுத்திட்டுப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். மக்களுக்கும்  காவல்துறைக்கும் இடையே.. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சங்கர் ஜூவால், “மக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே சுமூக நிலையை கொண்டு  வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சாலை விபத்துகளை குறைக்க மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.