tamilnadu

img

பருத்திக்கழகத்துக்கு ரூ. 1000 கோடி இழப்பு... இடைத்தரகர்களுக்கு பெரும் லாபம்... பிரதமர் தலையிட சு.வெங்கடேசன் எம்.பி., கோரிக்கை

மதுரை:
இந்திய பருத்திக் கழகத்தின் முரணான நடவடிக்கைகளால் இந்திய பருத்திக்கழகத்துக்கு சுமார் 1000 கோடி ரூபாய் இழப்புஏற்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும்  தொழில்முனை வோர்கள் கடும்நெருக்கடியில் சிக்கியுள்ள னர். ஆனால் இடைத்தரகர்கள் பெரும் லாபம் அடைந்துள்ளனர். இந்த பிரச்சனையில் பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடிதம் அனுப்பியுள்ளார்.

பிரதமருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:பருத்தி விலைகளை ஒழுங்கு செய்யவும், விலை ஆதரவுக்  கொள்கைகளை அரசு மேற்கொள் வதற்குமான தலையாய நோக்கோடு அமைக்கப்பட்ட இந்தியப் பருத்திக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்த சில பிரச்சனைகளை தங்களின் பார்வைக்கு கொண்டு வர விழைகிறேன். இக் கழகம் விவசாயிகளுக்கும், ஜவுளித் தொழிலுக்கும் இயற்கையாகவே பயன்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால் இந்தியப் பருத்திக் கழ கத்தின் சில நடவடிக்கைகள் அதன் உருவாக்க இலட்சியங்களுக்கும், உள்ளார்ந்த விருப்பங்களுக்கும்  முரணாக உள்ளன. ஊடகங்கள் மற்றும் தொழில் சார்ந்த வழிகள் மூலமாக கிடைக்கப் பெற்ற தகவல்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

கடந்த ஆண்டில் இந்தியப்பருத்திக் கழகம் இதுவரை இல்லாத அளவிற்கு 120 லட்சம் பேல்கள் விற்பனை ஆகாத இருப்பாக வைத்திருந்தது. இந்த நிலையில் இந்தியப் பருத்தி கழகம் பெருமளவு இருப்பை குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் விற்பனை செய்துள் ளது.லூயிஸ் ட்ரேஃபஸ் நிறுவனம் - 10 லட்சம் பேல், மஞ்சித் காட்டன் குரூப் - 15லட்சம் பேல், ரித்தி சித்தி - 15 லட்சம் பேல், ஓலம்/க்ளென்கோர்/ மற்ற பன்னாட்டுநிறுவனங்கள் - 10 லட்சம் பேல் எனமொத்தம் - 50 லட்சம் பேல். இந்தியப் பருத்திக் கழக விலை - (விலைப் பட்டியல்படி) ரூ. 36,500 (ஒரு கேண்டிக்கு)  கழி: மொத்த விற்பனைக் கழிவு 2 லட்சம் பேல் க்கு மேல் எனில் ரூ.1500 ஒரு கேண்டிக்கு. நிறுவன கொள்முதல் விலை ரூ.35 ஆயிரம்/ ஒரு கேண்டி. பட்டியல் விற்பனை விலை - ரூ. 38 ஆயிரம் / ஒரு கேண்டி. விலை வித்தியாசம்(இடைத் தரகர் லாபம்) - ரூ. 3000 / ஒரு கேண்டி. 50 லட்சம் பேல் = 23.20 லட்சம் கேண்டிகள் × ரூ. 3000 (ஒரு கேண்டி) = ரூ. 696 கோடிகள். அதாவது இடைத் தரகர்கள் அடைந்துள்ள லாபம் ரூ.696 கோடிகள்.அவர்கள் 50 லட்சம் பேல்களை சில சிறப்பு சலுகைகளோடு (தவணையில் செலுத்துதல் உள்ளிட்டு) வாங்கியுள்ளனர். இப்படி மேற்கண்ட நிறுவனங்களுக்கு தவணை முறையில் விற்ற

====தொடர்ச்சி 3ம் பக்கம்====