பிரிட்டனில் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு விலைவாசி உயர்வு ஏற்பட்டிருக்கி றது. வாழ்வதற்கான செலவினம் கடந்த 12 ஆண்டுகளில் 5.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பாக இது 4.2 விழுக்காடு அதி கரிப்பாக இருந்தது. ஒமைக்ரான் பாதிப்பு பரவி வருவது உடனடிக்காரணமாகச் சொல்லப்பட்டா லும், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் திட்டத்திற்கு மாற்று ஏற்பாடுகள் சரியாகச் செய்யப் படாதது முக்கியமான காரணமாகச் சொல்லப்படுகிறது.
அமெரிக்காவின் ஆக்கிரமிப்பால் நிலை குலைந்து போன ஆப்கானிஸ்தான் பற்றி மேலும் அதிர்ச்சியான தகவல்கள் வந்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் அவசர நிலை நிவாரண ஒருங்கி ணைப்பாளரான மார்ட்டின் கிரிப்த்,“97 விழுக்காடு ஆப்கானிய மக்கள் வறுமையால் வாடும் அபாயம் எழுந் திருக்கிறது.லட்சக்கணக்கான மாணவர்கள் பள்ளிக் கூடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்”என்றார்.
ஈரானின் விண்வெளி நடவடிக்கைகள் தொடர்பாக நல்ல செய்திகள் வரும் என்று ஈரான் அமைச்சரான இஸ்ஸா சரேபோர் தெரி வித்துள்ளார். பிப்ரவரி 2021ல் ஜுல்ஜனா என்ற ராக்கெட்டை ஈரான் வெற்றிகரமாக ஏவியது. இதைப் பயன்படுத்தி செயற்கைக்கோள்களை ஏவும் திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள். மார்ச் 2022ல் இது குறித்த நல்ல செய்திகள் வரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தொழில்வன்மை கொண்டு ஆறாவது நாடாக ஈரான் உருவாகும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.