tamilnadu

img

அமைதியான தமிழகத்தை வன்முறைக் களமாக மாற்றும் மதவாத சக்திகள்

கோவை, செப்.23- அமைதியான தமிழகத்தில் மதவாத சக்திகள் திட்டமிட்டு வன்முறையை செயல்படுத்துகிறது. ஆ.ராசா நூல்களில் சொல்லியிருக்கக் கூடியதை சொல்லி சரியா? தவறா? என்பதை தான் கேட்டிருக்கிறார். அதை மதவாதிகள் திட்டமிட்டு வன்முறையாக்கி வருகிறார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன், நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சூலூர் பகுதி பொதுமக்களிடம் குறைகளை  கேட்டு அறிந்து நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இப்பகுதியில் உள்ள சூலூர் பேரூராட்சி, இருகூர் பேரூராட்சி, கண்ணம்பாளையம் பேரூராட்சி, பள்ளபாளையம் பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, மனுக்களை பெற்றுக்கொண்டார்.  இதன்பின் செய்தியாளர்களிடம் பி.ஆர்.நடராஜன் எம்.பி., பேசுகையில், மின் கட்டண உயர்வு காரணமாக விசைத்தறியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சிறு, குறு தொழில்களை காப்பாற்றும் வகை யில், அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறோம். அரசு மின் கட்டண உயர்வு குறித்து பரிசீலனை செய்ய வேண்டும், என்றார்.

மேலும், மதவாத சக்திகள் திட்டமிட்ட வன்முறையை தமிழகத்தில் செய்து வரு கின்றன. அமைதியான தமிழகத்தில் வன்முறை யை உருவாக்கும் விதத்தில் அந்த அமைப்பி னர் செயல்பட்டு வருகின்றனர். ஆ.ராசா எம்.பி.,  யாரும் சொல்லாததை பேசி வருவதில்லை. நூல்களில் சொல்லி இருப்பதை மட்டும்தான் அவர் சொல்லி வருகிறார். அதில் குறிப்பிட்டுள்ளது நியாயமா? என்று தான் பேசி வருகிறார். இதனை மதவாதிகள் திசை  திருப்பி வருகிறார்கள். மதவாதிகள் சொல்லும் மனு தர்மத்தை புதிதாக எழுதி அதனை மாற்றியமைத்து சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்கள் கூட கிறிஸ்தவ மதத்திற்கு எதிராகச் செயல்பட்டார்கள் என்ற  கருத்தை  கூட கிறிஸ்தவ மதத்தின் தலைவ ரான போப் மதத்தின் பெயரால் நடந்திருப்பது தவறு என குறிப்பிட்டுள்ளார். இதுபோன்று தவறு என குறிப்பிட்டவர் மீது மதக்கலவரத்தை தூண்டும் விதமாக தமிழ்நாட்டில் ஒரு அமைதியற்ற நிலையை உருவாக்க முயற்சி செய்து வருகிறார்கள். தொடர்ந்து இது நீடிக்குமானால் மாநில அரசு  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதவாத  சக்திகளை  ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையில் நடைபெற்று வரும்  அசம்பாவிதங்களுக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் நடந்த சோதனைகள் காரணமா என தெரியவில்லை. ஏற்கனவே இதுபோன்று சொந்தக் கட்சி அலுவலகங்களிலேயே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. தற்போது அதுகுறித்து போலீஸ் விசாரணை  நடைபெற்று வருகிறது என்றார்.

;