tamilnadu

img

மாதர் சங்க மாநில மாநாட்டில் வரலாற்று கண்காட்சிகள் திறப்பு

கடலூர், செப்.29- மாதர் சங்கத்தின் மாநில மாநாட்டையொட்டிய வர லாற்றுக் கண்காட்சியை சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கே.பாலபாரதி திறந்து வைத்தார். அனைத்திந்திய ஜனநாயக  மாதர் சங்கத்தின் 16 ஆவது  மாநில மாநாடு கடலூரில் செப் டம்பர் 29, 30, அக்டோபர்  1 ஆகிய மூன்று நாட்கள்  நடை பெறுகிறது. இம்மாநாட்டை யொட்டி,  தமிழக முழுவதும் மாதர் சங்கத்தின் சார்பில்  நடை பெற்ற வீரம் செறிந்த போராட் டத்தின் புகைப்படங்கள் அடங்கிய வரலாற்றுக் கண்காட்சி அமைக்கப்பட் டுள்ளது. இதனை மாநில துணைத் தலைவரும் முன் னாள் சட்டமன்ற உறுப்பினரு மான கே.பாலபாரதி திறந்து வைத்தார். அதேபோல், அனைத்து குடியிருப்போர் நல சங்கங்க ளின் கூட்டமைப்பு சார்பில் ஓவியர் மனோகரன் வரைந்த விடுதலைப் போரில் ‘வீரப் பெண்மணிகள்’ கண்காட் சியை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா திறந்து வைத் தார்.

இதில் இந்திய விடு தலைப் போரில் பங்கேற்ற வீரப் பெண்மணிகளின் புகைப் படங்கள் காட்சிப்படுத்தப்பட் டுள்ளது.  இந்த நிகழ்ச்சியில் மாதர் சங்கத்தின் அகில இந்திய  துணைத் தலைவர் உ.வாசுகி, மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி, மாநிலப்  பொருளாளர் ஆர்.மல்லிகா, மாநில துணைத் தலைவர் என்.அமிர்தம், மாநிலச் செய லாளர்கள் எஸ்.கே பொன்னுத் தாய், ஏ.ராதிகா, வரவேற்புக் குழு செயலாளர் பி.தேன் மொழி,  பொருளாளர் எம். மருத வாணன் ஆகியோர் கலந்து கொண்டனர். திமுக மாநகரச் செயலாளர்  கே.எஸ். ராஜா, சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ். ஜி.ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி. ஆறுமுகம்,  எஸ். திருஅரசு, பி.கருப்பை யன், மாநகரச் செயலாளர் ஆர்.அமர்நாத், உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாதர் சங்கத் தின் மாநகர செயலாளர் சாந்தகுமாரி நன்றி கூறினார்.

;