tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

முன்பதிவில்லா பெட்டிகள் குறைப்பு

சென்னை: நாடு முழுவ தும் இயக்கப்படும் ரயில்க ளில் முன்பதிவில்லா பெட்டி களின் எண்ணிக்கையை 4-இல் இருந்து 2-ஆக குறைத் துள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. 26 ரயில் களில் முன்பதிவில்லா பெட்டிகளை குறைத்து, அதற்கு பதிலாக, ஏ.சி.-3  அடுக்கு (Tier) பெட்டிகளை  இணைக்க திட்டமிட்டு உள்ளது. இந்த நடைமுறை வெள்ளிக்கிழமை முதலே  அமலுக்கு வந்திருப்பது, ரயில் பயணிகளை அதிர்ச் சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

3 கோடி ஸ்மார்ட் மீட்டர் பொருத்த முடிவு

சென்னை: வீடு, வணிக நிறுவனங்களில் மின் பயன் பாட்டை துல்லியமாக கணக் கெடுக்கிறோம் என்ற பெயரில்,  மின்வாரியங்களில் ஆட்கு றைப்பை கொண்டு வருவதற் காக ஸ்மார்ட் மீட்டர் பொருத் தும் திட்டத்தை செயல்படுத்து மாறு ஒன்றிய அரசு, மாநி லங்களுக்கு உத்தரவிட்டிருந்தது. இதன்படி வீடு, வணிக நிறுவ னங்களில் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்த முடிவு செய்துள்ள மின்வாரியம், சுமார்  82 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள்  கொள்முதல் செய்ய புதிய டெண் டர்களை வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இராமேஸ்வரம் மீனவர்கள்  15 பேர் தாயகம் திரும்பினர்

இராமேஸ்வரம், பிப்.21 - இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ரூபில்டன், டேனியல் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் பேரில் ஜன.26 ஆம் தேதி கைப்பற்றினர். மேலும் 19 மீனவர்கள் கைது  செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் வவுனியா சிறை யில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கு பிப். 5 அன்று  கிளிநொச்சி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில்,  15 மீனவர்கள் மட்டும் அபராதத் தொகையை கட்டி விடுதலை  அடைந்தனர். இதையடுத்து, கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு வியாழக்கிழமை (பிப்.20) இரவு சென்னை வந்த டைந்தனர். தொடர்ந்து மீன்வளத் துறை அலுவலர்கள் ஏற்பாட்டில், தனி வாகனம் மூலம் இராமேஸ்வரத்துக்கு வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் சார்லஸ் மிரண்டா இலங்கை அகதி என்பதால் அனுப்பப்படவில்லை.

மதுரையில் 2027-க்குள் எய்ம்ஸ்?

மதுரை:  மதுரை  ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை யின் முழு கட்டுமானத்தை யும் 2027-ஆம் ஆண்டு பிப்ர வரி மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக, அதன்  இயக்குநர் அறிவித்து உள்ளார். கட்டுமானப் பணி கள் சீராக நடைபெற்று வரு வதாகவும், முதற்கட்டத்தில் கல்வி வளாகம், வெளி நோ யாளர் மருத்துவச் சேவை கள், தங்கும் விடுதிகள் மற்றும் அத்தியாவசிய சேவை  கட்டடங்கள் கட்டி முடிக்கப் படும் என்றும் தெரிவித் துள்ளார்.

உலகத்  தாய்மொழி நாள் கொண்டாட்டம்

சென்னை: 2000-ஆவது ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் பிப்.21 - உலகத் தாய்மொழி நாளாகக் கொண் டாடப்படுகிறது. இந்த ஆண்டு  25-ஆவது தாய்மொழி நாளா கவும் அமைவதால், ஐக்கிய  நாடுகளின் கல்வி, அறிவியல்  மற்றும் பண்பாட்டு அமைப்பான  ‘யுனெஸ்கோ’, இந்த ஆண்டுக்கு “மொழிகள் முக்கி யம்: சர்வதேச தாய்மொழி தினத் தின் வெள்ளி விழா” என்ற  கருப்பொருளைக் கொடுத்திருந் தது. அதன்படி வெள்ளியன்று உலகத் தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டது.