கும்பகோணம் அரசினர் ஆடவர் கலை கல்லூரியில் புதுப்பிக்கப்பட்ட பாலம்: அமைச்சர் திறந்து வைத்தார்
கும்பகோணம், மே 9- கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் (தன்னாட்சி) முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் படத்திறப்பு விழா மற்றும் புதுப்பிக்கப்பட்ட பால வழிப்பாதை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்விற்கு, தஞ்சை மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில், கல்லூரி முதல்வர் அ.மாதவி வரவேற்புரையாற்றினார். உயர்கல்வித்துறை செயலர் சி. சமயமூர்த்தி, கல்லூரி கல்வியை இயக்கம் ஆணையர் எ.சுந்தரவல்லி முன்னிலை வகித்தனர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் படத்தினை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு திறந்து வைத்தார். உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் , புதுப்பிக்கப்பட்ட பால வழிப்பாதையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் சு. கல்யாணசுந்தரம், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா, தஞ்சை மக்களவை உறுப்பினர் ச. முரசொலி, மயிலாடுதுறை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ. இராமலிங்கம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகர், என். அசோக்குமார், டிகேஜி. நீலமேகம், கல்லூரி கல்வி இணை இயக்குனர் து.ரோசி, மேயர் சரவணன், துணை மேயர் சுப தமிழழகன், பேராசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர்.