தேனி,மார்ச் 18- ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பலியான தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ மேஜர் யு.ஜெயந்த் உடலுக்கு அமைச்சர் இ.பெரியசாமி மலர் வளை யம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், ஜெயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ அதிகாரி மேஜர் ஜெயந்த் மார்ச் 16 அன்று அரு ணாச்சல பிரதேசத்தில் நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் வீர மரணம் அடைந்தார். மார்ச் 18 அவ ரது உடல் சொந்த ஊரான ஜெயமங்க லம் கிராமத்திற்கு கொண்டுவரப் பட்டது. அங்கு அமைக்கப்பட்டிருந்த அஞ்சலி மேடையில் அவருக்கு இறுதி மரியாதை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி அரசு சார்பில் அவரது உடலுக்கு மலர் வளை யம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி. ஷஜீவனா, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்), ஆ. மகாராஜன் (ஆண்டிபட்டி) ஆகியோ ரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மேஜர் ஜெயந்த்தின் மனைவியிடம் தமிழ்நாடு அரசின் கார்கில் பாது காப்பு நிதியிலிருந்து ரூ.20 லட்சத்திற் கான காசோலையை அமைச்சர் வழங்கினார்.
மேலும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் , மாவட்ட ஆட்சித்தலைவர் , சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகி யோர் ஜெயமங்கலம் கிராமத்திலி ருந்து நடந்து சென்று நடுப்பட்டி மயா னத்தில் நடைபெற்ற இராணுவ மரி யாதை நிகழ்ச்சியில் பங்கேற்று, மரி யாதை செலுத்தினர். இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், பெரியகுளம் நகராட்சித் தலைவர் சுமிதா சிவக்குமார் , தேனி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சக்கர வர்த்தி மற்றும் முன்னாள் படைவீரர் கள் நலத் துறை உதவி இயக்குநர் ம. எட்வர்ட் ராஜ், வருவாய் கோட்டாட்சி யர் சிந்து, ஊராட்சி மன்றத் தலைவர் அங்கம்மாள் சப்பானி , முப்படை அதி காரிகள் ,தேசிய மாணவர் படை அதி காரிகள் உட்பட பலர் கலந்து கெண்ட னர்.