tamilnadu

img

மாதர் சங்க மாநில மாநாடு கடலூரில் இன்று புதுமைப் பெண்கள் பேரணி

கடலூர், செப். 28- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 16ஆவது மாநில மாநாடு கடலூரில் வியாழக்கிழமை (செப். 29)  புதுமைப் பெண்களின் பேரணியுடன் தொடங்குகிறது. இதுகுறித்து சங்கத்தின் அகில இந்தியத் துணைத் தலைவர் உ.வாசுகி கடலூரில் புதனன்று (செப். 28)செய்தி யாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 1973இல் சுதந்திரப் போராட்ட வீரர்கள் கே.பி.ஜானகி அம்மாள், பாப்பா உமாநாத், ஷாஜாதி கோவிந்த ராஜன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம். இந்தியத் தேச விடுதலைக்காக போராடிய தலைவர்கள் தேச விடுதலைக்குப் பின்பு பெண் விடுதலை, ஜனநாயகம், சமத்துவம் என்ற லட்சியங்களை முன்வைத்து இந்த அமைப்பு துவங்கப்பட்டது. சங்கத்தின் 16ஆவது மாநில மாநாடு  செப்டம்பர் 29, 30, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் கடலூரில் நடைபெறுகிறது.

இன்று மாபெரும் பேரணி

 செப்டம்பர் 29 (இன்று) தமிழகம் முழு வதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான புதுமைப் பெண்கள் கலந்து கொள்ளும் லட்சியப் பேரணியும், பொதுக்கூட்டமும் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற உள்ளது.  பொதுக்கூட்டத்தில் அமைப்பின் பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே, துணைத் தலைவர்கள் உ.வாசுகி, சுதா  சுந்தர்ராமன் உள்ளிட்ட மாநிலத் தலை வர்கள் கலந்து கொள்கிறார்கள்.

நாளை பிரதிநிதிகள் மாநாடு

30ஆம் தேதி காலை 9 மணிக்கு சுப்பு ராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில்  பிரதிநிதிகள் மாநாடு துவங்கி அக்டோபர் 1 தேதி வரை நடைபெறுகிறது. தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாதர் சங்கத்தை வளர்த்த தலைவர்களின் நினைவாக நினைவுச் சுடர்களும்,  மாநாட்டுக் கொடியும் கொண்டுவரப்படு கிறது. தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதான வன்முறைக்கு எதிராகப் போராடிய போராளிகள் மாநாட்டில் கவுரவிக்கப்பட உள்ளனர்.

மாநில அரசுக்குக் கோரிக்கை 

தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண்  குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு உரிய  நடவடிக்கையைத் தமிழக அரசு எடுக்க வேண்டும். பெண்கள் கொள்கை ஒன்றை தமிழக அரசு வெளியிட்டிருப்பது பாராட்டத்தக்கது. இந்தக் கொள்கையை உருவாக்குவதில் மாதர் சங்கம் முக்கியப் பங்காற்றியது குறிப்பிடத்தக்கது. அந்தக்  கொள்கை எழுத்து வடிவில் மட்டுமல்லா மல் அவை செயல் வடிவம் பெறத் தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும் .

நிர்பயா நிதியைப் பயன்படுத்துக!

பெண்கள் குழந்தைகளைப் பாது காக்கும் சட்டங்களை நீர்த்துப் போகச்  செய்யாமல் கறாராக அரசு அமல்படுத்த வேண்டும். பெண்களைப் பாதுகாக்க ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிர்பயா நிதியை தமிழக அரசு முறையாகப் பெற்று அதைப் பயன்படுத்த வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதான  வன்முறையைத் தடுப்பதற்கு உரிய நட வடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான தீர்மா னங்களும் மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். செய்தியாளர் சந்திப்பின் போது மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி, மாவட்டச் செயலாளர் பி.மாதவி,  மாநிலக் குழு உறுப்பினர் வி.மேரி, மாநகரச் செய லாளர் சாந்தகுமாரி ஆகியோர் உடன் இருந்தனர்.