tamilnadu

மதுரை மணடலச் செய்திகள்

பிளவக்கல் பெரியாறு அணையின்  நீர்மட்டம் 27 அடியாக உயர்வு

வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் சுற்று வட்டார பகுதியில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சிலநாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் சாரல் மழையால் வத்திராயிருப்பு அருகே உள்ள பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளின்நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம்27 அடியாகவும், கோவிலாறு அணையின்நீர்மட்டம் 17 அடியாக உயர்ந்து உள்ளது.தற்போது பிளவக்கல் பெரியாறு அணைக்கு 90 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் பாசனத்திற்காக 63 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கோவிலாறு அணையிலிருந்து பாசனத்திற்காக 20 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகள் மூலம் வத்திராயிருப்புதாலுகா பகுதியில் 8 ஆயிரத்து 500க்கும்மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறுகின்றன. கடந்தாண்டு பெய்த மழையை விட இந்த ஆண்டு கூடுதலாக மழை பெய்து இப்பகுதியிலுள்ள கண்மாய்கள் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வந்துள்ளதால் இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள்மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

                            **********************

இன்று மின்தடை

திருவில்லிபுத்தூர்:
திருவில்லிபுத்தூர் கோட்டத்தில் உள்ள திருவில்லிபுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர், குட்ட தட்டி, சித்தாலம் புத்தூர், வெங்கடேஸ்வர புரம் கிராமம்உள்ளிட்ட பகுதிகளில் வியாழனன்று (10.12.20) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று திருவில்லிபுத்தூர்கோட்ட செயற் பொறியாளர் சுடலையாடும்பெருமாள் தெரிவித்துள்ளார்.

                            **********************

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி 

திருவில்லிபுத்தூர்:
ராஜபாளையம் அருகே உள்ள எஸ்.ராமலிங்கபுரத்தை அடுத்த சிவகாமிபுரத்தை சேர்ந்த இரு சக்கர வாகனமெக்கானிக் கண்ணன், கூடம்மாள் தம்பதிக்கு இரண்டு மகன்கள். 5 வயதான மூத்தமகன் முத்துக்கூடலிங்கம் ,இரண்டாவது மகன் விஸ்வா வயது2.புதனன்று பிற்பகலில் முத்துக் கூடலிங்கம் தனது வீட்டில் உள்ள மின் விளக்கை இயக்குவதற்காக, சுவிட்ச் பலகையை தொட்ட போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில்சிறுவன் நிலை குலைந்து நிகழ்விடத்திலேயே மயக்கம் அடைந்துள்ளான்.மயக்கம் அடைந்த நிலையில் இருந்த சிறுவனை, உடனடியாக பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு தூக்கி வந்துள்ளனர். அங்கு , முத்துக் கூடலிங்கம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.இது குறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் தெற்கு காவல் துறையினர், பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

                            **********************

ஸ்டாலின், ராசா மீது வழக்கு தொடரப் போகிறேன்: அமைச்சர் 

திருவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் திரு வில்லிபுத்தூரில் பால்வளத்துறை அமைச்சர்ராஜேந்திர பாலாஜி செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார் .அப்போது அவர் கூறியதாவதுமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிதாவையும் அவதூறாக பேசியஸ்டாலினையும் ராசாவையும் கைது செய்ய வேண்டும் என்று தலைமையிடம் பேசி ஒப்புதல் கொடுத்த பின் புகார் மனு கொடுத்து வழக்கு தொடர போகிறேன் என அமைச்சர் தெரிவித்தார்.

                            **********************

பாலியல் தொந்தரவு:  வாலிபர் கைது 

தேனி:
ஆண்டிப்பட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த 14 வயதுசிறுமி. அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.பள்ளி விடுமுறை என்பதால் ஆண்டிப் பட்டியில் உள்ள தனியார் தட்டச்சு பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த முத்தையா என்பவரின் மகன் லாரி டிரைவரான மகாலிங்கம் (35) என்பவர் கடந்த 5 ஆம் தேதிதட்டச்சு பள்ளிக்கு சென்ற சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுபாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஆண்டிப்பட்டி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், திருப்பூரில்சிறுமியுடன் தங்கியிருந்த மகாலிங் கத்தை கைது செய்தனர்.

 

;