மதுரை மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்காளர் பட்டியலை வியாழனன்று தேர்தல் நடத்தும் அலுவலர் மாநகராட்சி ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன் வெளியிட்டார். மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் ஆண்கள் 6,25,617, பெண்கள் 6,75,139, மூன்றாம் பாலினத்தவர் 138 என மொத்தம் 13,27,894 வாக்காளர்கள் உள்ளனர். மொத்த வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 1,317 என உள்ளது.