மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில உரிமை பாதுகாப்பு மாநாடு - பொதுக்கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி உரையாற்றினார். தமிழ்நாடு வணிக வரி - பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திருச்சி சிவா எம்.பி. (திமுக), சுதர்சன நாச்சியப்பன் (காங்கிரஸ்), இரா.முத்தரசன்(சிபிஐ), தொல்.திருமாவளவன் எம்.பி., (விசிக), அ.ரவிச்சந்திரன்(மதிமுக), கே.என்.காதர் மொய்தீன்(ஐயுஎம்எல்), ப.அப்துல் சமது எம்எல்ஏ.,(மமக), பி.வி.கதிரவன்(பார்வர்டு பிளாக்), ராமசாமி (கொ.ம.தே.க.), சு.வெங்கடேசன் எம்.பி., கோ.தளபதி எம்எல்ஏ., பூமிநாதன் எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மதுரை, ஜூலை 23 - இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பல்வேறு அம்சங்களை முடக்கிப் போட்டும், கூட்டாட்சிக்கு எதிரான அம்சங் களைத் திணித்தும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்காமலும், அனைத்து முனைகளிலிருந்தும் ஒன்றிய பாஜக அரசு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தச் சூழ லில் மாநில உரிமையை ஓங்கி முழங்கு வோம் என்றும் இந்தியாவின் கூட்டாட்சி யை காப்போம் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில உரிமை பாது காப்பு மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில உரிமை பாதுகாப்பு மாநாடு - பொதுக் கூட்டம் மதுரை முனிச்சாலை ஓபுளா படித்துறையில் ஞாயிறன்று மாலை நடை பெற்றது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் வருமாறு: ‘மாநிலங்களின் ஒன்றியமே இந்தியா’ என்பதை இந்திய அரசியலமைப்பு சட்டம் தெளிவாக வரையறுத்துள்ளது. இந்திய விடுதலைப் போராட்டமும், மொழிவழி மாநிலங்களுக்காக நடந்த வீறுகொண்ட போராட்டமும் கூட்டாட்சி இந்தியாவிற்கு அடித்தளமாக அமைந்தன. இருப்பி னும், நடைமுறையில் ஏராளமான அதி காரங்கள் ஒன்றிய ஆட்சியிடம் குவிக்கப் பட்டுள்ளன. 1950களில் மொழிவழி மாநிலங்களுக் காக நடைபெற்ற போராட்டமும், 1956 ஆம் ஆண்டு இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்ட சூழ்நிலை யில் மாநில உரிமைகளுக்கான குரல்களும் முன்னெழுந்தன.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு பின், ராஜமன்னார் ஆணையம் (1969) அமைக்கப்பட்டது. 1977 ஆம் ஆண்டில் மேற்கு வங்க இடது முன்னணி ஆட்சி யின் ஒன்றிய, மாநில உறவுகள் பற்றிய குறிப்பாணையும், 1983 ஆம் ஆண்டில் ஸ்ரீநகரில் ஒன்றிய, மாநில உறவுகள் பற்றிய எதிர்க் கட்சிகள் மாநாடும் கூட்டா ட்சியை வலுப்படுத்துவதற்கான வலிமை யான வெளிப்பாடுகளாக அமைந்தன. இந்த பின்னணியிலேயே, 1983 ஆம் ஆண்டில் சர்க்காரியா கமிஷன் அமைக்க ப்பட்டது. வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் மாநிலங்களுக்கிடையிலான கவுன்சில் ஏற்படுத்தப்பட்டது (1990), மிக முக்கிய மான வளர்ச்சிப்போக்காக அமைந்தது. இருப்பினும், பெருமுதலாளித்துவ வர்க்கத்தின் அழுத்தத்தில் இருந்து பல் வேறு அதிகாரக் குவிப்பு நடவடிக்கை களும் இதே காலத்தில் தொடர்ந்தன. இப்போது ஒன்றிய ஆட்சியில் அமர்ந்துள்ள பாஜக /ஆர்.எஸ்.எஸ், ஒற்றை ஆட்சியை யே தனது இலக்காக கொண்டு கூட்டாட்சி ஏற்பாட்டை மொத்தமாக சிதைத்துப் போட முயற்சிக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பல்வேறு அம்சங்களை முடக்கிப் போட்டும், கூட்டாட்சிக்கு எதிரான அம்சங்களை வலுவாக பயன்படுத்தியும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்களை மதிக்கா மலும், எல்லா முனைகளில் இருந்தும் கூட்டாட்சி ஏற்பாட்டின் மீது தாக்குதல் நடத்துகிறது. கூட்டாட்சி கோட்பாடும், மதச் சார்பின்மையும் பன்மைத்துவ பரிமா ணத்தை உள்ளடக்கியது. இதனால் தங்க ளது இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை (ஒரே மதம்) அமலாக்கிட எதேச்சதிகார, ஒற்றை ஆட்சி முறையை முன்னெடுக்க மாநில உரிமைகளை மறுக்கிற போக்கை ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து செய்துவருகிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவினை அதிரடியாக நீக்கி ஜம்மு - காஷ்மீர் மாநில மக்களின் உரிமைகளை பறித்து, அம்மாநிலத்தை துண்டாடி லடாக் பகுதியை தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. நாடு முழுவதும் மதச்சிறுபான்மை மக்க ளின் சிறப்புரிமைகளையும், குடியுரிமை யையும் பறித்து அம்மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற முனைகிறது. அரசியல் சட்டத்தின் 8வது அட்ட வணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளி ட்ட மொழிகளை ஒன்றிய ஆட்சி மொழி களாக்க மறுத்து சமஸ்கிருதம் மற்றும் இந்தி திணிப்பில் மூர்க்கத்தனமாக மோடி அரசு ஈடுபடுகிறது. மொழிச் சிறு பான்மை மக்களின் உரிமைகளை நிரா கரிக்கிறது. பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடனே திட்ட ஆணையத்தை கலைத்து ‘நிதி ஆயோக்’ உருவாக்கப் பட்டது. பதினைந்தாவது நிதி ஆணை யத்தின் பரிந்துரைகளும் மாநிலங் களுக்கு உள்ள அதிகாரத்தை வெட்டி ஒன்றியத்தில் குவித்தது. புழக்கத்தி லிருந்த 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுக் களை செல்லாது என தானடித்த மூப்பாக அறிவித்தது. ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை யை அமலாக்கி மாநிலங்களுக்கான வரி இனங்களை சுருக்கியது. மாநிலங்களு க்கு சேரவேண்டிய முறையான நிதிப் பகிர் வில் பெரும் அநீதி இழைக்கப்படுகிறது. 14வது நிதி ஆணையம், நாட்டின் மொத்த வரிவருவாயில் மாநிலங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பங்கு 42 விழுக் காடாக இருக்க வேண்டும் என்று கூறியதே அநியாயமானது, ஆனால் பாஜக அரசோ நடைமுறையில் அதையும் விட மோச மாக வெறும் 30.4 விழுக்காடு மட்டுமே மாநிலங்களுக்கு அளித்துள்ளது.
ஜி.எஸ்.டி ஈவுத்தொகைக்காகவும், ஈட்டுத் தொகைக்காகவும் பல மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. பெட்ரோல், டீசல் மீதான வரி இனங்களில் மாநில அரசுகளுக்கு பங்கு இருந்தது. ஆனால், தற்போது அந்த வரியும் ஒன்றிய அர சிடமே குவியும் விதத்தில் செஸ் வரியாக விதிக்கப்படுகிறது. மாநில பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறைக்கு வரம்பு வைப்ப தன் மூலமும் (FRBM) மாநில செல வினங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங் களின் அதிகார வரம்பிற்குள் நேரடி யாக தலையிடுவதற்கு ஆளுநர்கள் பயன் படுத்தப்படுகிறார்கள். சட்டமன்றங்கள் நிறைவேற்றிய மசோதாக்களை ஆளு நர்களே கிடப்பில் போடுகிறார்கள். குறிப்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தை அவமதிப்பதையும், அமைச்சரவையின் அதிகாரத்திலும், முதலமைச்சரின் அதிகாரத்திலும் வரம்பு மீறி தலையிடுவதையும் தயக்கமின்றி மேற்கொண்டு கண்டனங்களை எதிர் கொள்கிறார்.
ஒன்றிய அரசின் முகமைகளான அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ மற்றும் என்.ஐ.ஏ ஆகிய அனைத் தும் பாஜக அரசியலின் ஏவலாட்களாக மாற்றப்பட்டுள்ளன. எம்.எல்.ஏக்களை விலைபேசவும், ஆட்சிக் கவிழ்ப்பிற்கு மான கருவிகளாக இந்த அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. மாநிலக் கட்சிகள் மிரட்டப்படுகின்றன. மாநில அரசின் அதிகாரப் பட்டிய லில் இருந்த கல்வியை ஒட்டுமொத்த மாக கபளீகரம் செய்து, ‘ஒரே நாடு; ஒரே கல்வி’ என்ற அடிப்படையில் மாநிலங் களால் எந்த முடிவையும் மேற்கொள்ள முடியாமல் ஆக்கும் முயற்சி நடக்கிறது. கல்வியில் பெருமளவில் வணிகமயத்தை புகுத்துவதும், பாடத்திட்டங்களை மதவெறிமயமாக்குவதும் ஒருசேர நடக்கின்றன. தேசிய கல்விக் கொள்கை யின் பெயரால் இந்த அராஜகம் முன்னெடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்து வக் கல்லூரிகளில் ‘நீட்’ தேர்வு திணிக்கப் பட்டது. இப்போது ஒட்டுமொத்த மருத்துவ இடங்களையும் ஒன்றிய அரசே நிரப்பிட முயற்சிக்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டின் 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கும், அரசுப் பள்ளி மாண வர்களுக்கான 7.5 சதவிகித இட ஒதுக் கீட்டிற்கும் ஆபத்து எழுந்திருக்கிறது.
உள்ளாட்சி மன்றங்களின் செயல் திறனை மேம்படுத்துவது என்கிற பெய ரால் சொத்து வரி, பயனாளிகள் கட்ட ணங்கள் மற்றும் சேவை கட்டண உயர்வு களை அமலாக்க ஒன்றிய அரசு மாநிலங் களை நிர்பந்தப்படுத்துகிறது. இந்த வரி, கட்டண உயர்வுகளை அமலாக்க வில்லை என்றால் உள்ளாட்சி மன்றங்க ளுக்கான பல்வேறு வகையான நிதி, மானியங்கள் அனைத்தையும் ஒன்றிய அரசே வெட்டிக் குறைத்து வருகிறது. இந்த வரி, கட்டண உயர்வுகளால் மக் கள் அடையும் இன்னல்களை கண்டு கொள்ளாமல், உள்ளாட்சி அடித்தள ஜனநாயகத்தையும் பாஜக அரசு காலில் போட்டு மிதித்து வருகிறது. மாநில அரசின் அதிகாரத்தில் உள்ள கூட்டுறவு, விவசாயம், மின்சாரம் ஆகி யவற்றில் ஒன்றிய அரசு தலையிடு கிறது, விதிகளையும் சட்டங்களையும் இயற்றுகிறது. ஏற்கனவே உள்ள கட்ட மைப்புகளை சிதைக்கிறது. ரேசன் பொருட்களான அரிசி, கோதுமை மற் றும் பிற தானிய ஒதுக்கீடு, கிராமப்புற ஊரக வேலை உறுதி திட்ட நிதி ஒதுக்கீடு என அனைத்திலும் தன்னிச்சையான முடிவுகளை ஒன்றிய ஆட்சியே மேற் கொள்கிறது. தேவைக்கும் குறைவாக வெட்டிச் சுருக்குகிறது.
ஒன்றிய ஆட்சியிடமே அதிகாரம் குவிந்தால் பாரபட்சத்தையே உரு வாக்கும் என்பதற்கு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை ஒரு நடைமுறை உதாரணம் ஆகும். மாநில அரசு முன்னெடுத்த திட்டங்கள் குறித்த காலத்தில் முடிக்கப்பட்டு பயன்பாட் டுக்கு வந்துவிட்டன. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்திட வேண்டும் என்கிற மாநில அரசின் வலி யுறுத்தலை ஏற்றுக் கொண்ட ஒன்றிய மோடி அரசு 2019ல் அடிக்கல் நாட்டி யது. இன்றுவரை அப்படியே நிற்கிறது. இது தமிழ்நாட்டை வஞ்சிப்பதாகும். தமிழ்நாட்டில் பல்வேறு ரயில் திட் டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி வரி விதிப்பு, மின் கட்டண உயர்வு உள்ளிட்டு ஒன்றிய ஆட்சி வற் புறுத்தும் பொருளாதாரக் கொள்கை களால் சிறு குறுந்தொழில்கள் நசிவை எதிர்கொள்வதும் அதிகாரக் குவிப்பின் அபாயகரமான வெளிப்பாடே ஆகும். இப்படியான சூழலில்தான், இந்திய கூட்டாட்சியை பாதுகாக்கவும், மாநில உரிமை முழக்கத்தை உரத்து ஒலிக்க வும் சி.பி.ஐ(எம்) இம்மாநாட்டை நடத்து கிறது. இந்த மாநாட்டின் வழியாக,
* இந்திய ஒன்றியத்தை கூட் டாட்சி ஜனநாயமாகவும் மூன்றடுக்கு அதிகாரப் பரவல் கொண்டதாகவும் வலுப்படுத்த வலியுறுத்துகிறோம்.
* மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு சிறப்பு நிதி ஒதுக்கி பணி களை துரிதப்படுத்திட வேண்டும். தமிழ்நாட்டில் கிடப்பில் போடப் பட்டுள்ள ரயில்வே திட்டங்களுக்கு கூடு தல் நிதி ஒதுக்கி விரைவில் நிறை வேற்ற வேண்டும் என கோருகிறோம்.
* ஆளுநர் வழியாக மாநில ஆட்சி அதிகாரத்தில் மேற்கொள்ளப்படும் தலையீடுகளை இந்த மாநாடு கண் டிக்கிறது. மாநில அரசுக்கு மேம்பட்ட சக்தியாக ஆளுநர்களை பயன்படுத்து வதை முற்றாக எதிர்த்து நிற்கிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஆளு நர்கள் ஒப்புதல் வழங்க காலவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் ஆளுநர்களின் அதிகாரத்திற்கு சட்ட வரம்பிட வேண்டும் என்றும் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலி யுறுத்துகிறது. * ஒன்றிய விசாரணை முகமை களை ஏவி விட்டு, மாநில ஆட்சிகளை கவிழ்ப்பதும், கட்சிகளை மிரட்டு வதும் விலை பேசுவதும் ஜனநாய கத்திற்கே விடப்பட்டுள்ள சவாலாகும். இத்தகைய போக்குகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
* மாநிலங்களுக்கு கூடுதல் நிதி மற்றும் வரி அதிகாரத்தை உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறது.
* அரசியலமைப்பின் 8வது அட்ட வணையில் உள்ள 22 மொழிகளையும் ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக அங்கீகரித்திட வேண்டும். தொடர்ந்து மேற்கொண்டு வரும் இந்தி சமஸ்கிருத திணிப்பை முற்றாக கைவிட வேண்டும். தாய்மொழியை பயிற்று மொழி நிர்வாக மற்றும் அலுவல் மொழியாக உறுதி செய்திட வேண்டும் என கோரிக்கை விடுக்கிறது.
* தமிழ்நாட்டின் 69 சதவீத இட ஒதுக்கீட்டை அழித்தொழிக்க பல்வேறு முனைகளிலும் இருந்து மேற்கொள்ளப் படும் முயற்சிகளை முறியடித்து, இட ஒதுக்கீட்டை பாதுகாத்திட இம்மாநாடு உறுதியெடுக்கிறது.
* தேசிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும். மாநிலங்கள் தங்க ளுக்கான தனித்த கல்விக் கொள்கை யை உருவாக்கிக் கொள்ள அனுமதிக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
* கூட்டுறவு, மின்சாரம், விவசா யம் மற்றும் தொழிலாளர் துறைகளில் ஒன்றிய அரசின் மக்கள் விரோத, அரச மைப்புச் சட்ட விரோத தலையீடுகளை கைவிட வேண்டும். கூட்டுறவுத் துறை யை ஒன்றிய அரசு கைப்பற்றும் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளக் கூடாது என சுட்டிக்காட்டுகிறது.
* ஒன்றிய அரசின் நிதியோடு செயல்படும் திட்டங்களில் மாநிலத் தின் சூழலுக்கு ஏற்ப அமலாக்குவ தற்கான சுதந்திரத்தை இம்மாநாடு வலியுறுத்துகிறது. ரேசன் பொருட்கள் (அரிசி, தானியம்) ஒதுக்கீடு, நூறு நாள் வேலை திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு மாநிலங்களின் தேவைக்கு ஏற்ப அமைய வேண்டும். ரேசன் கடை களை மூடிடும் ஒன்றிய ஆட்சியின் முயற்சிகளையும், நூறு நாள் வேலைத் திட்டத்தை சிதைப்பதையும் இம்மாநாடு கண்டிக்கிறது.
* திட்ட ஆணையம் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும். தேசிய வளர்ச்சி ஆணையம் உரிய அதிகாரத்து டன் உருவாக்கப்பட வேண்டும். நிதி ஆணையங்கள், மாநிலத்தின் பார்வை யை உள்ளடக்கி செயல்படுவதை உறுதி செய்திட வேண்டும் என இம் மாநாடு வலியுறுத்துகிறது. இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட் டுள்ளது
மாநாட்டிற்கு சு.வெங்கடேசன் எம்.பி. தலைமை வகித்தார். சிபிஎம் மதுரை மாநகர் மாவட்டச் செய லாளர் மா.கணேசன் வரவேற்புரை யாற்றினார். கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீத்தா ராம் யெச்சூரி, மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் தோழ மைக் கட்சித் தலைவர்கள் சிறப்புரை யாற்றினார். மாநில செயற்குழு உறுப்பி னர்கள் எஸ்.கண்ணன், கே.சாமு வேல்ராஜ், மாநிலக் குழு உறுப்பி னர்கள் இரா.விஜயராஜன், எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா, புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், மதுரை மாநகராட்சித் துணை மேயர் டி.நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தெற்கு பகுதிச் செயலாளர் ஜெ. லெனின் நன்றி கூறினார். புதுகைப் பூபாளம் குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.