tamilnadu

img

பாப்பா உமாநாத், கஸ்தூரி நினைவு ஜோதி பயணம்

திருச்சிராப்பள்ளி, செப்.28 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க 16-வது மாநில மாநாடு கடலூரில் வியாழனன்று (செப்.29) தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. மாநாட்டில் ஏற்றப்பட உள்ள சுதந்திர போராட்ட வீரரும், மாதர் சங்க நிறுவன தலைவர்களில் ஒருவருமான தோழர் பாப்பா உமாநாத் நினைவு ஜோதியை பொன்மலை சங்கத்திடலில் உள்ள தோழர் பாப்பா உமாநாத் நினைவிடத்திலிருந்து, முன்னாள் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் நிர்மலா ராணி எடுத்துக் கொடுக்க, அதனை மாதர் சங்க மாநகர் மாவட்ட செயலாளர் சரஸ்வதி, புறநகர் மாவட்ட செயலாளர் கோமதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பொன்மலை சங்கத் திடலிலிருந்து மாநகர் மாவட்ட துணைத் தலைவர் ரேணுகா, புறநகர் மாவட்ட தலைவர் லிங்கராணி தலைமையில் புதனன்று மாநாட்டு ஜோதி பயணம் புறப்பட்டது. இதில் மாதர் சங்க நிர்வாகிகள் புவனேஸ்வரி, லலிதா, வைதேகி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சந்திர பிரகாஷ், தர்மா, மணிமாறன், பகுதி செயலாளர் விஜயேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

தோழர் ஆர்.கஸ்தூரி நினைவு ஜோதி 

மாதர் சங்க ஸ்தாபக தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக இருந்து மறைந்த தோழர் ஆர்.கஸ்தூரி நினைவாக போடியிலிருந்து ஜோதி பயணம் தொடங்கியது .துவக்க நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தேனி மாவட்ட தலைவர் எஸ்.மீனா தலைமை வகித்தார் .மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே.ராஜப்பன் ஜோதியை எடுத்து மாவட்டச் செயலாளர் பி.சித்ராவிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநிலக்குழு உறுப்பினர் சு.வெண்மணி, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.கே.பாண்டியன், விவசாயத்தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எல்.ஆர்.சங்கரசுப்பு, மார்க்சிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் எஸ்.செல்வம், மாதர் சங்க நிர்வாகிகள் ஆர்.தனலட்சுமி, ஜோதிமணி, என் .சுதா  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;